Thursday, December 15, 2011

NRI & PIO

http://www.nilacharal.com/ocms/log/02151017.asp
http://www.nilacharal.com/ocms/log/03291013.asp
http://www.nilacharal.com/ocms/log/06271102.asp
http://www.nilacharal.com/ocms/log/07111103.asp


நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். தமிழ் நாட்டில் சொத்து
ஒன்று வாங்க எண்ணுகிறேன். நான் என் பெயரில் வாங்க முடியுமா? நான் என்
தந்தைக்குப் பணம் அனுப்பி அவர் பெயரில் சொத்து வாங்கலாம் என்று
நினைக்கிறேன். இது சரியான வழியாக இருக்குமா?

நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் தமிழ்நாட்டில் உங்கள் பெயரில் சொத்து
வாங்க முடியாது என்பது தவறான எண்ணம். உங்கள் பெயரிலேயே சொத்து வாங்கலாம்.
அதற்கு ஒரு பவர் ஏஜண்ட்டை நீங்கள் தமிழ்நாட்டில் நியமிக்க வேண்டும்.
அதற்கான பத்திரம் தயாரித்து அதில் அமெரிக்காவில் உள்ள நோட்டரி பப்ளிக்
(Notary Public) ஒருவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அதைத்
தமிழ்நாட்டில் உள்ள நீங்கள் நியமிக்கும் பவர் ஏஜன்ட் அனுப்பி, இங்குள்ள
ஏதாவது ஒரு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registration Office)
அட்ஜுடிகேஷன் (Adjudication) செய்ய வேண்டும். அட்ஜுடிகேஷன் என்பது
ரூ.100/- பணம் செலுத்தி அந்தப் பத்திரத்தைப் பதிவு செய்யும் முறையாகும்.
இந்த முறையின் மூலம் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம். உங்களுக்கு பதில்,
பத்திரத்திலும், சார் பதிவாளர் அலுவலகத்திலும் (Sub Registration Office)
உங்களுடைய பவர் ஏஜண்ட் கையொப்பமிடுவார்.

பவர் ஏஜண்டை நியமித்தால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று சில பேர்
நினைப்பதுண்டு. பவர் ஏஜன்ட் தவறான வழியில் செயல்பட்டு விடுவார்கள் என்று
சந்தேகிப்பதுண்டு. பவர் பத்திரம் சரியான முறையில் தயாரித்து விட்டால்
இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பவர் ஏஜண்டை நியமிக்கும் போது அதற்கான பத்திரத்தில் நீங்கள் வாங்க
நினைக்கும் சொத்தின் முழு விவரத்தையும் கொடுத்து, குறிப்பிட்ட அந்த
சொத்தை வாங்குவதற்கு மட்டும் ஒருவரை பவர் ஏஜண்டாக நியமிக்க வேண்டும்.
அப்படி நியமிக்கும் போது உங்கள் பெயரில் சொத்து வாங்குவதற்கு மட்டும்தான்
அவர் பவரை உபயேகிக்க முடியும். மேலும், விற்பதற்கோ, அடமானம் போன்ற
காரியங்களை செய்வதற்கோ பவர் ஏஜண்டால் முடியாது.

நீங்கள் உங்கள் தந்தையையே பவர் ஏஜண்டாக நியமிக்கலாம். உங்கள் அப்பா
பெயருக்குப் பணம் அனுப்பி, அவர் பெயரில் சொத்து வாங்கும் போது அவருக்கு
வருமானத்திற்கான (Income Tax) வழிமுறை காட்ட வேண்டும். மேலும், உங்கள்
தந்தைக்கு திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் உங்களுக்காக
வாங்கப்பட்ட சொத்திற்கு அவருடைய எல்லா வாரிசுதாரர்களும் உரிமையாளர்களாகி
விடுவார்கள்.
----------------------
நான் இங்கிலாந்தில் வசித்து வருகிறேன். இந்தியாவில் உள்ள எனது சொந்த
ஊரில் எனக்காக சில சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். என் தந்தைக்கு
முறைப்படி பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருந்தேன். நான் இங்கிருந்து
ஊருக்கு பணம் அனுப்ப, என் தந்தை சொத்துக்களை வாங்கி அதைப் பராமரித்து
வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் இறந்துவிட்டதால், என் தாயார் எல்லாப்
பத்திரங்களையும் என்னிடம் தந்துவிட்டார். அவர் தற்போது என் சொத்துக்களைப்
பராமரித்து வருகிறார். எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள்.
அண்ணன் இந்தியாவிலும் தம்பி என்னுடன் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள்.
நான் எனது காலத்திற்குப் பின் என் சொத்துக்களை என் பிள்ளைகளுக்குத்
தந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். என் பிள்ளைகள் இருவரும்
இங்கிலாந்தில்தான் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு என் சொத்தைப்
பராமரிப்பதற்கோ அல்லது விற்பதற்கோ எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க
நான் என்ன செய்ய வேண்டும்? தகுந்த ஆலோசனை தேவை. நன்றி!

- சாந்தி, இங்கிலாந்து

நீங்கள் இரு வகையான பிரச்சினைகளைப் பற்றி கேட்டிருக்கிறீர்கள்.

1) சொத்தை விற்பது

2) சொத்தைப் பராமரிப்பது

1) சொத்தை விற்பது :

நீங்கள் முறைப்படிதான் சொத்து வாங்கியிருக்கிறீர்கள். உங்கள்
காலத்திற்குப் பிறகு உங்கள் சொத்து உங்கள் குழந்தைகளுக்குத்தான் போய்ச்
சேரும். அதை உங்கள் குழந்தைகள் விற்க நினைக்கும்போது அவர்களே இங்கு வந்து
விற்கலாம் அல்லது இங்கு யாருக்கவது Power of Attorney கொடுத்து
விற்கலாம். ஆனால் உங்கள் இரு குழந்தைகளில் எந்தெந்த சொத்து யாருக்கு
என்பதை நீங்கள் முடிவு செய்து இப்பொழுதே அதன்படி உயில் எழுதி வைத்து
விட்டால் நல்லது. அதை நீங்கள் இங்கு வரும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில்
(Sub Registrar Office) பதிவு செய்துவிடவேண்டும். அப்படி செய்துவிட்டால்
உங்கள் காலத்திற்குப் பிறகு அந்தந்த சொத்துக்களின் உரிமம் உங்கள்
பிள்ளைகளுக்குத் தானாகவே போய்ச் சேர்ந்துவிடும். பின்பு அவர்களுக்கென்று
உள்ள சொத்தை அவர்கள் தங்களது விருப்பப்படி தனியாக விற்கலாம்.

அப்படியில்லை என்றால் உங்கள் எல்லா சொத்துக்களுக்கும் உங்கள் இரு
பிள்ளைகளும் உங்கள் கணவரும் உரிமையாளர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள்
மூவரும் வாரிசு சான்றிதழ் வாங்கவேண்டும். எந்த சொத்தை விற்றாலும் மூவரும்
சேர்ந்துதான் விற்கவேண்டும். அதனால் இப்பொழுதே முறைப்படி உயில் எழுதி
பதிவு செய்து விடுவது நல்லது.


2) சொத்தைப் பராமரிப்பது

எந்த வகையான சொத்து என்பதை வைத்துத்தான் பராமரிப்பு அமையும்

a) வீடு அல்லது Flat
b) நிலம்

a) வீடு அல்லது Flat என்றால் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

i) அரசாங்கத்திற்குக் கட்டவேண்டிய Corporation tax, Metro water tax, EB
அனைத்தும் உங்கள் பெயரில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். அனைத்து
வரிகளையும் தவறாமல் கட்டி விட வேண்டும்.

ii) வாடகைக்கு விட்டிருந்தால், agreement உங்கள் பெயரில்தான் இருக்க
வேண்டும். அதற்கான வாடகைப் பணம் உங்கள் பெயரில் வங்கியில் போடப்பட
வேண்டும். ஒரு வேளை நீங்கள் Power of Attorney மூலம் வாடகைக்கு
விட்டிருந்தால், வாடகைப் பணத்தை அவர் வாங்கி உங்கள் வங்கி
அக்கவுண்ட்டி-ல் போடவேண்டும். அவர்கள் மூலம் வரிகள் அரசாங்கத்திற்கு
செலுத்தப்பட்டால் அதற்கான நகலை (copy) நீங்கள் அனுப்பச் சொல்லி
பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அரசாங்க இணையதளங்கள் மூலம்
சரிபார்த்துக் கொள்ளவேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தவறாமல்
புதுப்பிக்க (renewal) வேண்டும்.

சொத்தை தரிந்தவர்கள்தான் பராமரிக்கிறார்கள் என்று சிறிதளவும் அலட்சியமாக
இருத்தல் கூடாது.

b) நிலமாக இருந்தால் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:

i) உங்கள் பெயரில் பட்டா வாங்கி விட்டீர்களா என்பது மிக மிக முக்கியம்.
பட்டா வாங்காமலிருந்தால் முதலில் அதை வாங்கி விடுங்கள்.

ii)வருடத்திற்கு ஒரு முறை வில்லங்க சான்றிதழ் (EC) விண்ணப்பம் செய்து
வாங்கிக் கொள்வது நல்லது.


iii) உங்கள் நிலத்தைப் பராமரிப்பவர் அவ்வப்போது இடத்திற்குச் சென்று பார்வையிட்டு
யாராவது ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

iv) நீங்கள் இங்கு வரும் போது தவறாமல் நேரில் சென்று இடத்தை பார்வை
இடுங்கள்.

v) வரி கட்ட வேண்டிய இடமாக இருந்தால் தவறாமல் கட்டிவிடவேண்டும்.

vi) தாய்ப் பத்திரத்தை (Parent Documents) நிலம் வாங்கியவரிடமிருந்து
வாங்கி விட்டீர்களா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்
-----------------
NRI & PIO

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளி மரபை
சார்ந்தவர்களும் பணம் சேர்ந்தவுடன் முதலீட்டிற்காக முதலில்
தேர்ந்தெடுப்பது இந்தியாவில் உள்ள சொத்துகளில் முதலீடு செய்வது தான்.
குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக சொத்தின் விலை பல மடங்காக
உயர்வதால் வெளிநாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் இங்கு அதிகம்
நிலம் வாங்குகிறார்கள். ஏனென்றால் வெளிநாட்டு வங்கிகளில் கொடுக்கப்படும்
வட்டி விகிதம் மிகவும் குறைவு.

ஆனால் இந்திய நாட்டில் சொத்து வாங்குவதற்கான விதிமுறைகள் தெரியாததால் பல
இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் சொத்தை விற்கும் போதும்
வாங்குபவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்
இரு வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

1. Non Resident Indian (NRI)
இந்திய குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் வேலைக்காகவோ, தொழில் செய்வதற்காகவோ
அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளிநாட்டில் தங்க நேரிடும் போது அவர்
NRI-ஆக கருதப்படுகிறார்.

2. Person of Indian Origin (PIO)
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தானம், பூட்டான், இலங்கை மற்றும்
நேபாளம் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வாழும் வெளிநாட்டு வாழ்
இந்தியர்கள் கீழ்கண்டவற்றை ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் போது PIO- ஆக
கருதப்படுகிறார்கள்.

a) அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தால்.

b) இந்தியக் குடி உரிமை சட்டம், 1955 (57 of 1955) படி அவருடைய தந்தை
அல்லது paternal grand father இந்தியாவின் குடி உரிமை பெற்றவராக இருக்க
வேண்டும்.

மேற்கண்டவர்கள் இந்தியாவில் சொத்து வாங்கலாம். அப்படி வாங்கும் போது நம்
அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. வீட்டுமனைகள், வணிகவளாக இடம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு (flat)
போன்றவற்றை வாங்கலாம். விவசாய நிலம், பண்ணைத்தோட்டம் மற்றும் plantation
சொத்துக்கள் முதலியவைகளை வாங்கக்கூடாது.

2. இடம் யாரிடம் இருந்து வாங்குகிறாரோ அவருக்கு செலுத்த வேண்டிய தொகையை
வாங்குபவர் எந்த நாட்டில் குடியிருக்கிறாரோ அங்கு அவர் பெயரில் உள்ள
வங்கியில் இருந்தோ அல்லது இந்தியாவில் உள்ள அவரது வங்கி கணக்கில் இருந்தோ
Reserve Bank of India- வின் விதிமுறைப்படி பணம் செலுத்தியிருக்க
வேண்டும்.

3. மும்பையில் இருக்கும் Central Office of Reserve Bank-கிற்கு IPI7என்ற
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சொத்து வாங்கிய 90 நாட்களுக்குள்
கிரயப்பத்திரத்தின் நகலையும் மற்றும் நிலம் விற்பனை செய்தவருக்கு பணம்
வங்கி மூலம் செலுத்தப்பட்டதற்கான சான்றுகளையும் இணைத்து அனுப்பவேண்டும்.
IPI 7 படிவத்தில் பெயர், முகவரி எதன் அடிப்படையில் நீங்கள் NRI அல்லது
PIO ஆக இருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய சொத்து பற்றிய விவரம், எதற்காக
வாங்குகிறீர்கள் என்ற காரணம், எப்படி பணம் நீங்கள் செலுத்தி
இருக்கிறீர்கள் போன்ற விவரங்கள் இதில் கேட்கப்பட்டிருக்கும்.

மேற்கண்ட விதிமுறைகளை கைபிடிக்கும் பட்சத்தில் சொத்து வாங்குவதில் எந்த
பிரச்சனையும் இருக்காது.

இதில் பலர் செய்யும் தவறு இந்த விவரம் தெரியாமல் பண்ணை நிலங்கள் மற்றும்
உள்ளாட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் முதலியவற்றை வாங்கி
விடுவது தான். உள்ளாட்சியில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரம்
இல்லை என்ற காரணத்தினால் அந்த இடமும் அது எதற்கு பயன்படுத்தப்பட்டதோ அந்த
நிலமாகவே கருதப்படும். எடுத்துக்காட்டாக ஒரு விவசாய நிலம் உள்ளாட்சியால்
அங்கீகரிக்கப்பட்டு வீட்டு மனைகளாக விற்கப்பட்டிருந்தால் அது வீட்டு
மனையாக கருதப்படாது. விவசாய நிலமாகவே கருதப்படும். அதனால் இந்த இடத்தை
NRI அல்லது PIO வாங்கக்கூடாது.

மலேசியாவில் வசிக்கும் PIO ஒருவர் 2000-ஆம் ஆண்டு இந்த விவரம் தெரியாமல்
அரக்கோணம் அருகில் 5 ஏக்கர் பண்ணை நிலம் ஒன்றை வாங்கி அதை அதிக பணம்
செலவழித்து மா, கொய்யா, தென்னை போன்ற மரங்களை நட்டு பராமரித்து வந்தார்.
அவசரத்தேவைக்கு இப்போது விற்க நினைக்கும் போது அவரால் அந்த இடத்தை விற்க
முடியவில்லை. வாங்குவதற்கே அனுமதி இல்லாத ஒருவரால் இதை எப்படி விற்க
முடியும் என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்போது விற்கவும்
முடியாமல் அதை என்ன செய்வது என்றும் தெரியாமல் திணறுருகிறார்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். பலர்
இந்தியாவில், முக்கியமாக தமிழ் நாட்டில் நிலத்தில் முதலீடு செய்து விட்டு
சிறிது காலத்திற்குப் பிறகு அதை நல்ல விலைக்கு விற்று, விற்ற முழு
பணத்தையும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டிற்கு எடுத்துச்
செல்லலாம் என நினைக்கிறார்கள். அது தவறு. அவர்கள் 26.05.1993 அன்றோ
அல்லது அதற்கு பிறகோ சொத்து வாங்கி இருந்தால் அந்த சொத்தை அவர்கள்
விற்பனை செய்யும் பட்சத்தில், இடம் வாங்கும் போது எவ்வளவு பணம்
கொடுத்தார்களோ அந்த பணத்தை மட்டும் தான் அவர்கள் வசிக்கும் நாட்டிற்கு
வங்கி வழியாக எடுத்துச் செல்ல முடியும். மீதி பணத்தை இந்தியாவில்
அவர்களுடைய வங்கி அக்கவுன்ட்டில் தான் வைத்திருக்க வேண்டும்.
26.05.1993-க்கு முன்பு வாங்கி இருக்கும் சொத்தை விற்கும் போது முழு
பணத்தையுமே எடுத்துச் செல்ல முடியாது. பணத்தை எடுத்துச் செல்வதற்கும் சில
விதிமுறைகள் இருக்கின்றன. அதற்கு மும்பையில் இருக்கும் Central Office of
Reserve Bank -ன்அனுமதி பெற வேண்டும். IPI 8 என்ற படிவத்தை பூர்த்தி
செய்து நிலம் விற்ற 90 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். Reserve Bank of
India -யிடம் அனுமதி பெற்ற பின்னரே பணத்தை எடுத்துச் செல்ல முடியும். IPI
8 படிவத்தில் பெயர், குடியுரிமை, பிறந்த தேதி, விற்ற சொத்தின் முழு
விவரங்கள் மற்றும் இந்தியாவில் அவருக்கு இருக்கும் வங்கியின் அக்கவுன்ட்
விவரங்கள் முதலியவை கேட்கப்பட்டிருக்கும். இரண்டு சொத்துக்களுக்கு
மட்டுமே இப்படி செய்ய முடியும். இரண்டு சொத்துக்களுக்கு மேல்
வாங்குபவர்கள் அந்த சொத்தை விற்கும் போது தாங்கள் அனுப்பிய பணத்தைக் கூட
திருப்பி எடுத்துச் செல்ல முடியாது. மேலும் சொத்து வாங்கி மூன்று
வருடத்திற்கு பிறகு தான் விற்க முடியும். இந்த விவரம் தெரியாததால் பல
பேர் அவதிப்படுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு ஒரு வீட்டு மனையை அமெரிக்காவில் வாழும் NRI ஒருவர்
வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நிலம் வாங்குவதற்கு அவர்
கொடுத்த தொகை 5,000.00 US டாலர்கள் 2010-ல் அவர் அந்த வீட்டு மனையை
ரூ.7,00,000.00 (ரூபாய் ஏழு இலட்சம்)-த்திற்கு விற்கிறார். US டாலரின்
மதிப்பு ரூபாய்.45.00 என்று வைத்துக் கொள்வோம். ரூபாய். ஏழு
இலட்சசத்திற்கு அவருக்கு 15,555.00 US டாலர்கள் கிடைக்கும். ஆனால் அவர்
2001-ல் நிலம் வாங்கும் போது கொடுத்த 5,000.00 US டாலர்கள் மட்டுமே அவர்
வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முடியும். மீதி
தொகையை இந்தியாவில் அவருடைய வங்கிக் கணக்கில் தான் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலம் மட்டுமே வெளி நாடுகளில் இருந்து சம்பாதித்து விட்டு
திரும்பி வருபவருக்கு இந்த மாதிரி பிரச்சனை ஏற்படாது.

அதனால் வெளிநாடு சென்று வேலை பார்த்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவிற்கு
திரும்பி வந்து இருந்தால் மட்டுமே இங்கு இடம் வாங்க வேண்டும்.
வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற நினைப்பவர்கள் சம்பாதித்த பணம்
பன்மடங்காக பெறுக வேண்டும் என்ற ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு
சொத்துக்களை வாங்கக் கூடாது. 1998-ஆம் ஆண்டு லண்டனில் வேலை கிடைத்த
ஒருவர் குடும்பத்தோடு லண்டன் செல்கிறார். அவருடைய திட்டம் 10 ஆண்டுகள்
அங்கிருந்து பணம் சம்பாதித்தவுடன் இந்தியா திரும்புவதாக எண்ணம். தனது
இரண்டு குழந்தைகளையும் அங்கேயே பள்ளிகளில் சேர்த்து விடுகிறார். 2000-ஆம்
ஆண்டு மனைவிக்கும் அங்கு வேலை கிடைக்கிறது. இருவர் சம்பாத்தியத்தில்
தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை வாங்குகிறார்கள். 2010-ல் அவர்கள் முதலில்
திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு வர முயற்சி எடுக்கிறார்கள். அவர்களுக்கு
ஏற்றாற் போல் இங்கு வேலையும் அமையவில்லை. பிள்ளைகளும் வளர்ந்து விட்ட
காரணத்தினால் கல்வி முறையும் வேறுபடுவதால் பிள்ளைகள் லண்டனிலேயே இருக்க
விரும்புகிறார்கள். இப்போது அவர்கள் தமிழ்நாட்டில் வாங்கிய இடம் பல
மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. நமது அரசாங்க சட்டப்படி அவர்கள்
லண்டனிலிருக்கும் போது இங்கு இடம் வாங்கியதற்கு அனுப்பிய பணத்தை மட்டுமே
இப்போது அங்கு எடுத்துச் செல்ல முடியும். மீதி பணத்தை என்ன செய்வது என்று
தெரியவில்லை. யாருக்கு கொடுப்பது என்றும் புரியவில்லை. அவ்வளவு பெரிய
தொகையை இங்கு விட்டுச் செல்ல மனமில்லாமலும் என்ன செய்வது என்று
தெரியாமலும் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

-----------------
வெளிநாட்டிலுள்ள பலர் தங்கள் பெயரில் சொத்து வாங்க ஆசைப்பட்டாலும்
அதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை. இங்கு உள்ள தமக்கு நம்பிக்கையான ஒருவரை
POA நியமித்து தங்கள் பெயரிலே சொத்து வாங்கலாம். இந்த விவரம் தெரிந்து
இருந்தும் சிலர் POA-யாக நியமிக்கப்படுபவர் அதை தவறான வழியில்
உபயோகப்படுத்தி விடுவார் என்ற பயத்தினாலும் சொத்து வாங்க யோசிப்பது
உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் பெயரிலே அரசாங்க விதிமுறைகளுக்கு
உட்பட்டு தமிழ்நாட்டில் (இந்தியாவில்) இடம் வாங்க முடியும்.

POA-ஆக நியமிக்கப்படுபவருக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கும் பட்சத்திலும்,
பத்திரத்தில் குறிப்பிடப்படும் விஷயங்கள் Specific (குறிப்பாக) இல்லாத
சமயத்தில்தான் அதை தவறான வகையில் உபயோகப்படுத்த முடியும். எந்த சொத்தை
வாங்க இருக்கிறோமோ அந்த சொத்தை வாங்குவதற்கு மட்டும் அவருக்கு POA
கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கப்படும் POA-யில் Power-யாருக்கு
கொடுக்கிறோமோ அவருடைய பெயர், முகவரி, சொத்தினுடைய முழு விவரம் அதாவது
அளவு (Measurement), சர்வே எண், கிராமம், வட்டம், மாவட்டம், எந்த சார்
பதிவாளர் அலுவலகத்தில் இந்த சொத்து பதிவு செய்யப்பட இருக்கிறதோ அதனுடைய
விவரம் முதலியவை குறிப்பிடப்பட வேண்டும். மேற்கண்ட விவரம் அனைத்தும்
தெளிவாக இருக்கும் பட்சத்தில் POA-யாக நியமிக்கப்படுவர் தவறான முறையில்
POA உபயோகிக்க முடியாது. ஏனென்றால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சொத்திற்கு
மட்டும் அந்த குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்
பத்திரத்தில் கையொப்பம் இட்டத்துடன் அவர் வேலை முடிந்து விட்டது. வேறு
எதற்கும் அவர் அந்த POA உபயோகிக்க முடியாது.

(எ.கா). ‚பெரும்புத்தூர் வட்டத்தில், வடகால் 'B' கிராமத்தில், 270 சர்வே
எண்ணில் அடங்கி உள்ள 2400 சதுர அடி கொண்ட அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையை அமெரிக்காவில் உள்ள ஒருவர் வாங்குவதாக
வைத்து கொள்வோம். அவர் சென்னையிலுள்ள நம்பிக்கை உள்ள ஒருவரை POA
நியமிக்கிறார். இந்த சொத்து‚ பெரும்புத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட விவரங்களை குறிப்பிட்டு POA
கொடுக்கும் பட்சத்தில் POAயாக நியமிக்கப்பட்டவர்‚ பெரும்புத்தூர்
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பத்திர பதிவின் போது அமெரிக்காவில்
உள்ளவரின் சார்பில் கையொப்பம் இடுவார். வேறு எதற்கும் இந்த POA உபயோகிக்க
முடியாது.

சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை வாங்க வேண்டியதிருக்கும் என்ற
பட்சத்தில், ஒவ்வொரு முறையும் தனி தனியாக POA தயாரிக்க வேண்டியதிருக்குமே
என்று, அதற்கு நேரம் இல்லை, அலைய முடிவதில்லை என பல காரணங்களை சொல்லி ஒரே
பத்திரத்தின் மூலம் எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு இறுதியில்
பிராச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் வேலை
கிடைத்தவுடன், அங்கு போவதற்கு முன்பு இங்கு இருக்கும் போதே தன்னுடைய
உறவினர் யாரையாவது POA-ஆக நியமித்து அவருக்கு எல்லா அதிகாரமும் கொடுத்து
விடுகிறார்கள்.

2005-ல் அமெரிக்காவில் ஒருவருக்கு வேலை கிடைக்கிறது. 5 வருடம் பணிபுரிய
வேண்டிய வாய்ப்பு. அவருடைய உறவினர் ஒருவரின் அறிவுரையின் படி தம்முடைய
உறவினர் ஒருவரை POA-யாக நியமித்து விட்டு அமெரிக்கா செல்கின்றார். அந்த
POA-யில் எந்த ஒரு சொத்து வாங்குவதற்கு, விற்பதற்கு, வங்கியில் அடமானம்
வைப்பதற்கு லே-அவுட் போடுவதற்கு போன்ற எல்லாவற்றுக்கும் அவருக்கு
அதிகாரம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு போய் சம்பாதித்து பணத்தை
இங்கே அனுப்பி POA மூலம் வளசரவாக்கத்தில் ஒரு சொத்து வாங்குகிறார்.

பத்திரப்பதிவு எல்லாம் முடிந்த பிறகு பத்திரத்தின் Xerox ஒன்றும் POA-ஆல்
அவருக்கு அனுப்ப படுகிறது. அதை பார்த்த அவர் எல்லாம் நன்றாக நடந்து
விட்டதாக நினைத்து சந்தோஷப்படுகிறார். 2வருடம் கழித்து சென்னை வந்த
அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருக்கிறது. POA-ஆல் அந்த சொத்து
முன்று மாதத்திற்கு முன்பே விற்கப்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது
என்று அவருக்கு புரியவில்லை. இதற்கு காரணம் என்ன? POA-யை நியமிக்கும்
போது சொத்தை விற்பது உட்பட எல்லாவற்றுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது
தான்.

மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு நாமே வழிமுறையை உண்டு பண்ணுகின்றோம்.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு ஆவணத்தைத் தயாரிக்க
வேண்டும். ஆவணத்தை வெள்ளை தாளில் தயாரித்தால் போதும் முத்திரை தாள் தேவை
இல்லை. இப்படி தயாரித்த ஆவணத்தில் அங்கு Notary இடம் கையொப்பம் பெற
வேண்டும் (இங்கு Notary Public என்பது போல). மேலும் POA கொடுப்பவர்
புகைப்படம், மற்றும் இடது பெருவிரல் ரேகை இருக்க வேண்டும். Notary-ன்
முழு விவரம் அதாவது பெயர், முகவரி, அவருடைய Licence காலவதியாகும் நாள்,
அவருடைய கையெழுத்து, முக்கியமாக அவர்களுக்கு அங்கு உள்ள அரசாங்கத்தால்
அனுமதி அளிக்கப்பட்ட முத்திரை முதலியவை இடம் பெற்று இருக்கும். மேலும் 2
சாட்சிகளும் கையொப்பம் இட வேண்டும். பத்திரத்தில் எல்லா பக்கங்களிலும்
POA கொடுப்பவர் கையொப்பம் இருக்க வேண்டும்.

இந்த POA ஆவணத்தைத் தபால் அல்லது Courier மூலம் POA-யாக
நியமிக்கப்படுபவருக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் Visa நகல் அல்லது அங்கு
எத்தனை வருடங்கள் தங்க அனுமதி கிடைத்து இருக்கிறது என்பதற்கான
ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றையும் அனுப்ப வேண்டும். இந்த POA ஆவணத்தைத்
தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு District Registrar அலுவலகத்தில்
Adjudication செய்ய வேண்டும். அதற்கு வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட Power
ஆவணம், POA-யாக நியமிக்கப்படுபவரின் புகைப்படம், ID Proof, Visa நகல்
முதலியவற்றை District Registrar அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
முத்திரைத்தாள் கட்டணமாக 105/- ரூபாய் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்
கொள்ள வேண்டும். POA-யின் புகைப்படம் Power ஆவணத்தின் ஏதாவது ஒரு
பக்கத்தின் பின்புறம் ஒட்டப்பட்டு, District Registrar அந்த
புகைப்படத்தில் கையொப்பம் இடுவார். மேலும் Adjudication Number ஒன்று
கொடுக்கப்படும். மேலும் 105/- ரூபாய் POA- யால் கட்டப்பட்ட விவரம்
குறிப்பிடப்பட்டு District Registrar கையொப்பம் இட்டு இருப்பார்.
Adjudication Number மிகவும் முக்கியமானது. இந்த நம்பரை சொத்து வாங்கும்
போது பதிவு செய்யப்படும் கிரையப்பத்திரத்தில் மறக்காமல் குறிப்பிட
வேண்டும்.

Power ஆவணம் வெளிநாட்டில் எந்த தேதியில் Notary-யிடம் கையொப்பம்
வாங்கப்பட்டதோ அன்றிலிருந்தது 90 நாட்களுக்குள் இங்கு Adjudication
செய்துவிட வேண்டும். அதற்கு பிறகு செய்ய முடியாது. பிறகு திரும்பவும்
புதிய Power தான் வெளிநாட்டில் இருந்து அனுப்ப வேண்டும்.

இந்த POA முறையில் ஒரு குறைபாடும் இருக்கிறது. இப்படி வெளிநாட்டிலிருந்து
அனுப்பப்படும் Power தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு District Registrar
அலுவலகத்தில் Adjudication செய்யப்படுவதால் EC-யில் இந்த entry வராது.
01.11.2009 முதல் தமிழ்நாட்டில் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் Power
பதிவு செய்யப்பட்டாலும் அது சொத்து அமைந்துள்ள சார் பதிவாளர்
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு EC-யில் entry வரும்படி அரசாங்கத்தால்
வழிமுறை செய்யப்பட்டது. இது பல மோசடிகள் தவிர்க்க உதவியது.

இதே முறையை வெளிநாட்டிலிருந்து கொடுக்கப்படும் POA-க்கும்
அமுல்படுத்தினால் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள
எந்த District Registrar அலுவலகத்தில் Adjudication செய்யப்பட்டாலும் அது
உடனேயே சொத்து அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு
EC-யில் entry வரும்படி செய்ய வேண்டும். இப்படி செய்த பிறகு தான் இந்த
POA உபயோகப்படுத்த முடியும் என்றும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

சிலருக்கு இன்னும் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து
POA சொத்து வாங்கும் போது பத்திரத்தில் யாருடைய பெயர் இருக்கும், யாருடைய
புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும் என்பது தான். கிரையப்பத்திரத்தில் சொத்து
வாங்குபவர் என்ற இடத்தில் வாங்குபவர் பெயர் தான் இருக்கும். ஆனால் POA
தான் கிரையப்பத்திரத்தில் கையொப்பம் இடுவார் என்பதினால் represented by
என்று POA-யின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் புகைப்படம்
ஒட்டப்படும் இடத்தில் POA-யின் புகைப்படம் தான் இருக்கும். சொத்து
வாங்குபவரின் புகைப்படம் இருக்காது.