Thursday, December 15, 2011

தாய் பத்திரம்

தாய் பத்திரம்

சொத்து வாங்கிய உடனேயே சிலர் அந்த சந்தோஷத்தில் தாய் பத்திரங்களை
விற்பனையாளரிடமிருந்து வாங்க மறந்து விடுகிறார்கள். இதில் பல பேர் ஒரு
Lay out-ல் வீட்டு மனையை வாங்குபவர்கள் தான். Lay out-ல் வீட்டு மனை
வாங்கும் எல்லோருக்கும் original தாய் பத்திரம் கொடுக்க முடியாது
என்பதினால் அவர்களுக்கு நகல் மட்டுமே Lay out விற்பவரால் கொடுக்கப்படும்.
அதை நாம் கிரயப்பத்திரம் பதிவு செய்யும் அன்றே வாங்கி விட வேண்டும்.

அரக்கோணம் அருகில் ஒரு Lay out-ல் வீட்டு மனை ஒன்றை ஒருவர் 2005-ஆம்
வருடம் வாங்குகிறார். பத்திரப்பதிவு முடிந்த பிறகு கிரயப்பத்திரத்தை
மட்டும் வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்கிறார். 5 வருடங்கள் கழித்து
வருவாய்த்துறையில் பட்டா வாங்க நினைக்கும் போது அதற்கு தாய்பத்திரம்
தேவைப்படுகிறது. தனக்கு வீட்டு மனை விற்பனை செய்த நிறுவனத்தின்
அலுவலகத்திற்கு சென்று பார்க்கும் போது அந்நிறுவனம் அங்கிருந்து காலி
செய்து 3 ஆண்டுகள் ஆகின்றன என்ற செய்தி கிடைக்கிறது. ஆனால் எங்கு மாறி
சென்றிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை. பொதுவாக
கிரயப்பத்திரத்தில் யார் யாரிடமிருந்து மாறி வந்தது என்ற விவரங்கள்
குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்து அதற்கு முந்தைய கிரயப்பத்திரத்தின்
நகலை பெறுகிறார். அந்த கிரயப்பத்திரத்தில் இருந்து எந்த விவரங்களும்
கிடைக்கவில்லை. இப்போது அவரால் பட்டாவை மாற்ற முடியவில்லை. இந்த வீட்டு
மனையை விற்பனை செய்தது ஒரு Real estate நிறுவனம் என்பதால் அவர்கள்
சொத்தின் உரிமையாளரிடம் Power of attorney வாங்கி அதை வீட்டு மனைகளாகப்
பிரித்து விற்பனை செய்து இருக்கிறார்கள். வருவாய்த்துறையின்
பதிவேட்டின்படி சொத்தின் உரிமையாளர் பெயா¢லும் பட்டா இல்லை. அதற்கு
முன்பு சொத்தை வைத்திருந்தவர் பெயரில் பட்டா இருக்கிறது. இது சம்பந்தமான
தாய் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் பட்டா மாற்றம் செய்ய முடியாமல்
தவிக்கிறார்.