Thursday, December 15, 2011

EC பெறுவது எப்படி

EC ( Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்

ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம்
தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.

1) சர்வே எண்
2) விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம்,செய்து கொண்ட தேதி,
பதிவு செய்யப்பட்ட தேதி
3) பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement
போன்ற விவரம்
4) சொத்தின் மதிப்பு
5) சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6) தொகுதி மற்றும் பக்க எண்
7) பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்

மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால்
வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்கள்ம் தெரியும். EC-யை வைத்தே
தாய் பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள
எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் வாங்க
இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Moartgage (பதிவு
செய்யப்பட்ட அடமானம்)செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில்
தெரிந்துவிடும்.
சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.


1. 01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை
விற்பதற்குயாரையாவது Power of attorney-யாக நியமித்து இருந்தால் அது
EC-ல் வராது.

Power of attorney-ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல்
இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்
வரும்.

2. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத
ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்
வராது.

3. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத
அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.

மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள்
நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகிறனது.


EC பெறுவது எப்படி?

சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ
அங்கு வில்லங்கச்சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 01.01.1987-ல்
இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும். அதற்கு முன்பு Manual EC
தான். 01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின்
மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் இணைய தளத்தின் முகவரி
www.tnreginet.net. இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில
இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை
இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது
சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்
நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.

விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம்
மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்
செய்ய வேண்டும். இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால்
மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது
அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான
நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சென்னைக்கு அருகில் ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power
of Attorney-ஆக 2006-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக
நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின்
உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்து
விட்டார்.. இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக
நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம்
வாங்கி கிரைய ஒப்பந்தம்(Sale Agreement)செய்து விட்டார். சட்ட ரீதியாக
இது செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்று
விட்டார்.