Wednesday, January 11, 2023

வ.உ.சிதம்பரனார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

             இந்தியாவில்

            உண்மையான

             தியாகி யார் ?

   வ.உ.சிதம்பரனார் தான்


         அந்த தியாகிக்கு

         முதலில் துரோகம்

             செய்தது யார் ?

              இரண்டாவது 

துரோகம் செய்தது யார் ?

         இதை முழுவதும்

       படித்துப் பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்
பிள்ளை மட்டுமே.

அதிலும் கோ|வை சிறைதான், வ.உ.சிக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. .அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. 

இதுதான் வ.உ.சிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை  தடுத்துள்ளார்..

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! 

இதைவிட கொடுமை,
====================

தன்னுடைய வக்கீல் 
===================
உரிமத்தை மீட்டெடுக்க 
=====================
கோர்ட்டில் வாதாடி உதவ 
=======================
வேண்டும் என்று வஉசி
======================
கேட்டதற்கு,   
============ 

மூத்த வக்கீலான 
=================
மூதறிஞர் ராஜாஜி 
=================
மறுத்துவிட்டாராம்.
==================

இவர் தான் வ.உ.சிக்கு
துரோகம் செய்த 
முதல் இந்தியர், தமிழர்

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு,     
                      
தென் ஆப்பிரிக்காவில் 
======================
உள்ள தமிழர்கள்,  5000 
======================
ரூபாய் நிதி திரட்டி 
=================

காந்தியிடம்
=============
 தந்திருக்கிறார்கள்.. 
===================
"எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்த பணத்தை 
=======================
காந்தி, வஉசிக்கு தரவே 
=======================
இல்லையாம்.. "           
=====================

இதனால் தான் இந்தியர்கள் திரும்ப வராத கடனை 
காந்தி கணக்கு என்று நாம் சொல்கிறோம்.


 (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியையோ, போர்க்குணமுள்ள நல்ல தலைவனான அவருக்கு
 சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பதும் கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே  வஉசிக்குதான் உண்டு..!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி..
இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், முழுவதையும் கூறுங்கள்.

திருப்பூர்குமரன்

Thirupur Kumaran 

 #திருப்பூர்குமரன் பலிதானதினம் (11.01.1932). 

1. சுதந்திர போராட்டத்தின்போது காந்தியடிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, 1932-ம் ஆண்டு ஜனவரி 11- ம் தேதி, திருப்பூரில் நடைபெற்ற ஊர்வலத்தில், பிரிட்டிஷ் காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டபோதும், தேசியக் கொடியை கீழே விட்டுவிடாமல், அடி தாங்கி கொடி காத்த தீரனாய் 28 வயதில் அமரரானவர்.

2. இயற்பெயர் குமாரசாமி. 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.  தந்தை நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி. 

3. சுதந்திர போராட்டத்திற்குப் பெயர் கொடுத்தார் குமரன். தலைமை ஏற்க வேண்டிய செல்வந்தர் ஈஸ்வரமூர்த்தியைப் பெற்றோரும் உற்றாரும் தடுத்துவிட்டனர். 9 தொண்டர்களை மங்களவிலாசுக்கு அழைத்து வந்த பி.ஏ. சுந்தரம் நிலையைப் புரிந்துகொண்டார். தொண்டர்கள் சுந்தரத்தை தலைமை ஏற்கச் சொன்னார்கள்.

4. ஒன்பது பேரையும் அணிவகுத்து நிறுத்தினார் சுந்தரம். கையில் கதர்க்கொடி பிடித்து காந்தி மகானை மனதில் நிறுத்தி பாரததேவியின் கோவிலுக்குப் புறப்படும் பக்தனைப் போல் வீறுநடை போட்டார் குமரன்.

5. 'வந்தேமாதரம்' என்ற முழக்கம் வானை எட்டியது. ஊரார் திரண்டு வாழ்த்து கூறினர். காவல் நிலையம் வந்தது. முப்பது காவலர்களும் இரண்டு அதிகாரிகளும் பாய்ந்து வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் மகமது. அவரே காவல்படைக்கு அங்கு தலைவர். தேசபக்தர்களைத் தேடிப்பிடித்து உதைப்பது அவருக்கு உகந்த செயல்.

6. மகமதுவும் மற்ற காவலர்களும் வெறி கொண்டு, தடியால் தாக்கினர். குமரனின் இடது காதுக்கு மேலே விழுந்த அடியில் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டது. 

7. 'வந்தேமாதரம்! வந்தேமாதரம்!'' என்று சொன்ன குமரனின் வாய் ரத்தத்தால் நிறைந்தது. உயர்த்திப் பிடித்த கொடியோடு தரையில் வீழ்ந்தார். தாய்நாட்டுத் துரோகிகளாகிய காவலர்கள் கொடியைப் பிடுங்க முயன்றனர். ''கொடியைப் போடுடா'' என்று கூறிக்கொண்டே தாக்கிய கொடியவர்களின் அடியையும் தாங்கிக் கொண்டு கொடி அவர்கள் கையில் போகாவண்ணம் இறுக்கிப் பிடித்தார், குமரன். ஆத்திரமுற்ற கயமைக் காவலன் ஒருவன் குத்திட்டு நின்ற மண்டை ஓட்டின் மீது ஓங்கி அடித்தான். அடியால் அழுத்தப்பட்ட அந்த ஓடு, மூளையில் பாய்ந்து, செயலிழந்தது மூளை.

8. மண்ணில் வீழ்ந்தான் மாவீரன். கொடியவர் கூட்டமோ குமரனின் உடலை மிதித்தது. கொடியை மிதித்தது. ரத்தச் சேற்றில் அந்தக் கொடி அழுந்திக் கிடந்தது.

9. 1932 ஜனவரி மாதம் 11-ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது.  ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது குமரன் தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.

#tiruppurkumaran #சான்றோர்தினம் #இந்துமுன்னணி