டயர்களில் காற்றின் அழுத்தத்தை அடிக்கடி பரிசோதிப்பதும், பராமரிப்பதும் ஒவ்வொரு கார் உரிமையாளரின் கடமை. ஆனால், பலரும் இதை பொருட்படுத்துவதில்லை. இதனால், அவர்கள் பல சமயங்களில் நேரத்தையும், பணத்தையும் வீணாக செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
டயர்களில் காற்றின் அழுத்தம் சரியாக பராமரிக்கும்பட்சத்தில், டயர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்; எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, பயணங்களும் இனிதாக அமையும்.
கார் டயர்களில் காற்றின் அழுத்தத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்
1. காரின் டயர்கள் குளிர்ச்சியாக இருக்கும்போது, காற்றின் அழுத்தத்தை அளவிடுவது நல்லது. குறைந்தது மூன்று மணிநேரத்திற்கு மேல் பயணம் மேற்கொள்ளும்போது, காற்றின் அழுத்தத்தை அளவிடுவதை தவிர்க்கவேண்டும். நீண்டதூர பயணத்தின்போது டயர்களில் காற்றின் வெப்பம் அதிகரித்து சரியான அளவை கணக்கிட முடியாது.
2.மாதத்திற்கு ஒரு முறையாவது டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. கார் நிறுவனங்கள் பரிந்துரைந்த அளவுகளில் காற்றின் அழுத்தத்தை பராமரிக்க வேண்டும்.
3.டயர்களில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது, கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து ஓட்டினால், கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதைவிட, டயர்களின் ஆயுட்காலமும் வெகுவாக குறையும்.
4.காரை கண்ணை மூடிக்கொண்டு வேகமாக ஓட்டி சாலையில் உள்ள பள்ளங்களில் இஷ்டத்திற்கு ஏற்றி இறக்கினால், டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்துவிடும். குறிப்பாக, வாகனங்களை பின்தொடர்ந்து வேகமாக செல்லும்போது பள்ளங்களை பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் ஓட்டுவது நல்லது.
5.காற்று பிடித்தவுடன் வால்வுகளில் காற்று கசிகிறதா என்பதை சரிபார்த்துகொள்ள வேண்டும்.
6.காற்றின் அழுத்தத்தை அளவிட உதவும் கருவிகள் சந்தையில் ரூ.450 முதல் கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். ஆயிரக்கணக்கான மதிப்புடைய டயர்களை பாதுகாப்பதற்கு இந்த கருவி கண்டிப்பாக உதவும். தவிர, காற்று செக்கப் செய்வதற்கு கியூவில் நிற்பதையும் தவிர்த்து வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
For Details - http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/car-tire-pressure-maintenance-tips-aid0091.html