சுபாஷிதம் -1
பிரம்மராஜாரிஷி ரத்னாட்யாம் வந்தே பாரதமாதரம்
-----------------------
சுபாஷிதம் -2
பால்-அறத்துப்பால்/ இயல்-துறவறவியல்/அதிகாரம்-தவம்/குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
விளக்கம்
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு
செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்ருதவசனம் - 1 (பரமபூஜினிய ஸ்ரீ குருஜி கூரியது)
இந்த தாய்நாடு நமது அன்னை. அவள் ஷக்தி வடிவமனவள். ஆதிசக்தி, உலகத்திற்கே
தாயாக விளங்குபவள். வெறும் கல் மண் அல்ல. ஆகவே அவளை வழிபடுகின்றோம். இவள்
நம்முடைய வணங்கத்தக்க தெய்வமாக இருக்கின்றாள்.
அம்ருதவசனம் - 2 (சுவாமி விவேகானந்தர் கூரியது)
*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம்
ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும்
ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த
நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள்
மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே
அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும்
நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு
இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும்
குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
எங்கள் ஆருயிர் தாய் நாடே
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பண்பு மலர் கதை - 1 (மருது பாண்டியர்)
திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப்
பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத்
தகர்ப்பைக் கைவிட்டனர். [இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப்
போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில்
கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால்,
நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச்
சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி
பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர்.
முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது
சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை
இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு
இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள்.
பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம்
நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை
வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது
குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது
மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது. காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்
"காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நிலைக்கும்" என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி
வளைத்தான்.கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க" அக்னியூ
திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு
செயலைச் செய்தார்கள். இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை. முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம்
கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின்
முழுக்கவனமும் இருந்தது.
பண்பு மலர் கதை - 2 (சுவாமி விவேகானந்தர்)
மேலைநாட்டு (அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ) வெற்றிகளுக்குப்
பிறகு இந்தியாவிற்குத் திரும்பும் வேளையில் நண்பர் ஒருவர்
விவேகானந்தரிடம், 'சுவாமிஜி, ஆடம்பரமும் செல்வாக்கும் மிக்க மேலை
நாடுகளில் நான்கு வருடங்கள் வாழ்ந்து விட்டீர்கள். இதோ இப்போது உங்கள்
தாயகத்திற்குத் திரும்புகிறீர்கள். உங்கள் தாய்நாட்டைப்பற்றி இப்போது
என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். விவேகானந்தரின் கண்களில்
மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னின. முகத்தில் ஆனந்த பரவசம் மிளிர்ந்தது.
உணர்ச்சி பொங்கும் குரலில்,
'அங்கிருந்து வருமுன்பு நான் இந்தியாவை நேசித்தேன்.இப்போதோ அதன் துசிகூட எனக்கு புனிதமாகத் தெரிகிறது. அங்கு வீசும் காற்று புனிதம். அது ஒரு
புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்' என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தர் பாரத நாட்டில் காலடி வைத்தவுடன், இப்போது என்னுடைய தாய் நாட்டை, கலாச்சாரத்தை, புனிதத்தை மேலும் பலமடங்கு நேசிக்கிறேன் என்று சொல்லி கிழே கிடந்த மணலை தன்மேல் எடுத்து பூசிக்கொண்டார். ஏன் என்று கேட்டதற்கு போக பூமிகளுக்கு ஏற்ப்பட்ட தவக்குறைவு நீங்குவதற்காக என்று சொன்னார். மேலும் நம்முடைய இப்புனிதத் தாய்நாடு, தர்மத்திற்கும், தத்துவத்திற்கும் இருப்பிடமாகும். இது மனித நிலையை கடந்து ஆன்மீக மக்கள் பிறந்த பூமி. தனக்கென எதையும் ஏற்காதவர்களின், துறவிகளின் நாடு இது. தொன்மையான காலத்திலிருந்து இன்றுவரை பாரதத்தில் மட்டுமே மனிதனின் முற்போக்கு வாழ்கைக்கு ஒரு உயரிய முன்னுதாரனம் அமைந்துள்ளது என்று சொன்னார்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரிய கதை (கங்கை புனிதமானது)
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம்
கங்கை நதியை இந்துக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். நதிகளை வணங்குவதற்கான மந்திரத்தில் கங்கைக்குத்தான் முதலிடம். இதில் குளித்தால் பாவங்கள் தீரும் என நம்புகின்றனர். கங்கையை
மகாபாரதத்தில் பீஷ்மரின் தாய் என்று குறிப்பிடுகின்றார்கள்.இந்துக்கள் அனைவரும் தங்கள் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும் என்று விரும்புவர்.மேலும் முக்தி பெற்ற சாதுக்கள் அனைவரும் கங்கையில் உயிரை விட பெரிதும் விரும்புவர்.
புண்ணியம் தழைக்கச் செய்வது கங்கை நதி. தேவலோகத்தில் மந்தாகினியாகவும்; பாதாள உலகில் பாகீரதியாகவும்; பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதக என்று போற்றுவார்கள். மகிமை வாய்ந்த கங்கை நல்லாளைக் கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பர்.
மிகவும் கடினமான வேலையை முயற்சியுடன் செய்து சாதிக்கும் செயலுக்கு
பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன்தான்.
சகர மன்னர் அஸ்வமேத யாகம் மேற்கொண்டார். அவர் யாகம் நிறைவேறிவிட்டால், தன் பதவிக்கு சமமாக அவர் உயர்ந்துவிடுவாரே என்று பொறாமை கொண்ட இந்திரன், யாகத்து குதிரையைக் கவர்ந்து வந்து, பாதாள லோகத்தில் கபில முனிவர் வசித்து வந்த கபிலாரண்யத்தில் கட்டிவிட்டுப் போய்விட்டான். குதிரையைத் தேடிவந்த மன்னரின் அறுபதாயிரம் வாரிசுகளும் பாதாள லோகம் வந்து, குதிரையைப் பார்த்து, அதை மீட்டுச் செல்லும் முயற்சியில் முனிவரின் தவத்தைக் கலைத்தனர்.. அதனால் கோபமுற்ற முனிவர் அவர்களைப் பார்க்க, அப்போதே அவர்கள அனைவரும் சாம்பலானார்கள். இவ்வாறு சாம்பலாகிவிட்ட தன்னுடைய மூதாதையர் நற்கதி அடைய விரும்பிய பகீரதன், கங்கையை நோக்கி கடுந்தவம் .செய்தார். ""நான்
பூமிக்கு வரும் அளப்பரிய வேகத்தை சிவனால் மட்டுமே தணிக்க முடியும். எனவே சிவனை வேண்டித் தவமிருந்து, என்னைத் தாங்கி பூமியில் விழச் செய்ய அவர் சம்மதம் பெற்று வா'' என உபாயம் கூறினாள். மீண்டும் சிவனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் காட்சி கொடுத்து, ""என்ன
வரம் வேண்டும்?'' எனக் கேட்க, ""கங்கையிடம் பூமிக்கு வர சம்மதம்
வாங்கிவிட்டேன். அவள் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி பூமியில் பாயவிட வேண்டும்'' என்று கேட்டான். சிவனும் சம்மதித்தார். கங்கை வெகு வேகமாக பூமிக்கு வந்தாள். சிவன் தன் தலைமுடியால் தடுத்து அமைதியாகப் பாயச் செய்தார். இந்த கங்கை, பகீரதன் வழிகாட்ட, பாதாளத்தில் பாய்ந்து, அவனுடைய முன்னோர்களின் சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு மோட்ச கதியை அளித்தாள்
இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள்- வைகாசி மாத வளர்பிறை 10-ஆம்
நாளில்தான். அவன் தன் முன்னோரின் பாவங்களை நீக்கிய இந்நாள் பாஹர
தசமியாகும். இதையொட்டி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத் திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். காசி, அஹமதாபாத்தில் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் தொலையும்; பித்ருக்களின் ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம். பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, "கங்கைத் தாயே' என குரலெழுப்பி மனமார வணங்குகின்றனர். பிரவகிக்கும் கங்கை நீரை கண்ணார தரிசிக்கின்றனர். தொட்டு வணங்கி தலையில் தெளித்துக்கொண்டு கங்கையை போற்றிப் புகழ்ந்தபடி மூழ்கிக்
குளிக்கின்றனர். நதியிலேயே நின்று பூஜிக்கின்றனர். நீரில் அர்க்கியம்
விடுகின்றனர். அதன்பின் நீரின் அடியில் உள்ள மண்ணை எடுத்து
வணங்குகின்றனர். மாலையில் நதி ஓரம் முழுதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு
தீபத்தை கங்கைக்கு காட்டி பூஜிப்பார்கள். நதி ஓர கடைகளில் இலையால் செய்த
சிறு படகில் விளக்கு வைத்து பூ வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி
பக்தர்கள் ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.
கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து
காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும்
வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு
அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம
காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப்
புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட்,
பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட்,
அனுசூயா காட் என 80க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. இவற்றில்
குளிப்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் கரையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கும் "கங்கா ஆரத்தி" மிகச் சிறப்பானது.
ஆத்திகரோ, நாத்திகரோ அவசியம் வந்து செல்ல வேண்டிய இடம் காசி. "காசம்"
என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல "காசி" என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசிக்கு வந்து செல்வது
வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தரும் என்பதற்கு
குமரகுருபரர், சுப்ரமண்ய பாரதியார் தொடங்கி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன
கங்கை வழிபட்ட தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று திருச்சி
காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்- காவிரி நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் காசி விஸ்வநாதர் சந்நிதி வாசலில் வலப்பக்கம் விநாயகரும், இடப்பக்கம் கங்காதேவியின் விக்ரகமும் உள்ளன.
தினமும் இந்த கங்கா தேவி காவிரித் தீர்த்தத்தால் அபிஷேகிக்கப்படுகிறாள்.
இப்படி கங்கைக்கு காவிரி நீரில் அபிஷேகம் செய்வதை இங்கு மட்டும்தான்
காணலாம். இது ஒரு அபூர்வ காட்சியாகும். இவ்வாலயத்தில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சியையும், ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சியையும், தையல்நாயகி சமேவைத்தீஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரி
சமேத ஐம்புகேஸ்வரரையும், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரரையும் என ஐந்து
ஈசனாரையும் தரிசிக்கலாம். பாவங்கள், நோய் உள்ளிட்ட தீவினைகள் அகன்று
நன்மைகள் பல பெற்று வாழ இவ்வாலயம் சென்று வழிபடலாம்.
எத்தனை கங்கைகள்!
கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில்வசிப்பது, 'கங்கா' என்று
உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது...இவை யாவும்
பாவம் போக்கும் செயல்களாகும்!
இமயமலையில், 'கோமுக்' பனிச் சிகரத்தில் உற்பத்தியாகி, மேற்கு
வங்காளத்தில் உள்ள கங்கா சாகரில் (வங்கக் கடலில்) சங்கமிக்கிறாள்
கங்காதேவி! இவள், தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும்
உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு சிறப்புகளுடன் திகழ்கிறாள்
அமர் கங்கா:
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது
அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் 'அமர் கங்கா' நதி நீர் எப்போதும்
குளிர்ச்சியாகவே இருக்கும்.
நீல கங்கா:
ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடியபோது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம்கழுவ... நதி நீர், நிறம் மாறியது! இதனால், 'நீல கங்கா'எனப் பெயர் பெற்றது.
காளி கங்கா:
அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரை பயம்
கொள்ள வைக்கு ம்.
ராம் கங்கா:
இது, உத்தரப் பிரதேசத்தில்- காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.
ஜட கங்கா:
உத்தரப் பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற ஜில்லாவில்
பாய்கிறது.
கோரி கங்கா:
வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர்
தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.
கருட கங்கா:
உத்தரப் பிரதேசம், அல்மோரா- பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும்
கங்கைக்கு, 'கருட கங்கா' என்று பெயர்.
பாண கங்கா:
'ஜம்மு'வைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.
பால கங்கா:
இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசிய தால், 'பால
கங்கா' என்றுபெயர்!
ஆகாச கங்கா:
கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும்போது, அங்கு காணப்படும்
நதியே ஆகாச கங்கை!
பாதாள கங்கா:
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது
பாதாள கங்கா
தேவ கங்கா:
இது, மைசூர்- சாமுண்டி மலைக்குக் கிழக்கே பாய்கிறது.
துக்த கங்கா:
வடமொழியில் 'துக்தம்' என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற
ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.
வாமன் கங்கா:
வாமன் என்றால், 'குள்ளம்' என்று அர்த்தம்! மத்தியப் பிரதேசம்
ஜபல்பூரில், 'பேடாகாட்' என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.
கபில் கங்கா:
நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய் யும் வழியில் வருவது, 'தம் கட்'
என்ற ஊர். இங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை!
கரா கங்கா:
சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள
இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வதே கரா கங்கா
மோக்ஷ கங்கா:
நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் எனும் சோத்திரம் வரும்.
இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது 'மோக்கடி' என்ற கிராமம்.
இதையட்டி, 'மோக்ஷ கங்கா' ஓடுகிறது
இந்த கங்கையின் புனிதம் இன்றும் உலக விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு புதிராகவே இருக்கிறது. கங்கை நீர் எவ்வளவு
நாளானாலும் கெடாமல் இருக்கும் அதிசயம் எப்படி நிகழ்கிறது? கங்கை நீரின் பரிசுத்தத்தைப் பரிசோதித்தவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அது - கங்கை ஒரு தெய்வ நதி.
மனமுருகி வேண்டுவோரின் புற அழுக்குகள் மட்டுமின்றி அக அழுக்குகளையும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ அசுத்தங்களையும் போக்கும் தெய்வீக நதி. இமயமலையில் கோமுகியிலிருந்து வெளிப்படும் கங்கை, அந்த கங்கோத்ரி பகுதியில், கோயிலில் வழிபடப்படுகிறாள். கங்கைக்காக ஆதிசங்கரர்
தனிக்கோயிலே ஸ்தாபித்திருக்கிறார். இங்குள்ள கங்காதேவி உற்சவர் விக்ரகம்,
தங்கத்தால் ஆனது. கங்கை சென்ற பாதாள உலகம், இன்றும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இருக்கிறது. இந்தியாவிலிருந்து நேர்க்கோடாக அடியில் உள்ளது, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா, அதாவது புராணகாலத்து கபிலாரண்யம்! இங்கே உள்ள தீவின் பெயர் ஆஷ் ஐலைண்ட் சாம்பல் தீவு. சகரர்கள் சாம்பலாகிப் போனார்களே அந்த பாதாள லோகம்தான் இது என்கிறார்கள் புராண ஆராய்ச்சியாளர்கள்.
(அருகிலேயே ஹார்ஸ் ஐலைண்ட் (குதிரைத் தீவு) எ ன்றும் ஒரு பகுதி
இருக்கிறது!) இந்த சாம்பலைக் கரைத்த கங்கை நீர்தான், இப்போது சாம்பல்
தீவைச் சூழ்ந்துள்ள நீர்ப்பகுதியாம்!. இன்னொரு விஷயம்,. இந்த ஆஷ் ஐலைண்ட் பகுதியில் நீர்நிலை என்றுமே வற்றுவது கிடையாதாம்.கங்கை வற்றுமா, என்ன?
கங்கை சொம்பு இல்லாத வீடே கிடையாது.புனிதமான குளியலுக்கு கங்கா ஸ்நானம் என்று பெயர்.புனிதத்தின் முக்கிய காரணம் அதன் தூய்மை தான்.காலம் காலமாக கலசத்தில் வைத்திருந்தாலும் கெடாது. இது ஏதோ இந்து மதத்தினரின் நம்பிகை மட்டும் கிடையாது ,விஞ்ஞான பூர்வமான ஓர் உண்மை. கங்கையின் தூய்மை கெட்டுவிட்டது என்றும்,அதில் எரிக்கப்பட்ட,எரிக்கப்படாத
பிணங்கள் வீசப்படுவதால் தான் கங்கை மாசுபட்டுவிட்டது என்கின்றனர்.உண்மை அதுவல்ல.பலநூறு ஆண்டுகளாக கங்கையில் பிணங்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் ஆற்றில் உள்ள நுண்ணூயிர்களும்,மீன்களும் அப்பிணங்களைத்தின்று செரித்து,கங்கையை ,புனித கங்கையாக்கிக் கொண்டிருந்தன..மேலும் கங்கை நீர் கெடாமல் இருப்பதற்கு காரணம் ,இந்நீரில் உள்ள மிகையான ஆக்ஸிஜன்,கணிமம்,மற்றும் நுண்ணுயிர்கள். இன்று கங்கையில் அந்த மீன்களும் ,நுண்ணுயிர்களும் குறைந்து விட்டது. காரணம். ,ரிஷிகேஷ் முதல் பிரையாக் வரை இடைப்பட்ட பகுதியில் 146 ஆலைகளின் கழிவுகள் கங்கையில் கலக்கின்றன.வழியில் 1.3 பில்லியன் லிட்டர் சாக்கடை கங்கையில் கலக்கிறது.கங்கையில் கலக்கப்படும் ரசாயன கலவைகளால் இதில் உள்ள நுண்ணுயிர்கள் குறைந்து கொண்டு வருகின்றன.இத்தனை மாசுகளையும் மீறி கங்கை இன்னும் புனிதமாக தான் இருக்கிறது.இப்போது கூட கங்கை நீரில் மற்ற நதிகளில் உள்ளதை விட ஆக்ஸிஜன் கூடுதலாகத்தான் இருக்கிறது
லண்டனிலிருந்து கல்கத்தா வரை வரும் கப்பல்கள்,ஜிப்ரால்டர் போன்று
ஏழு,எட்டு இடங்களில் குடிதண்ணீரை மாற்றிக்கொள்கின்றன.ஆனால்,கல்கத்தாவிலிருந்து லண்டன் திரும்பிச்செல்கையில் ஹூக்ளியில்[கங்கையின் கிளைநதி] பிடித்த குடி தண்ணீர் லண்டன் சென்ற பிறகும் கெடுவதில்லை.
இப்பேற்பட்ட கங்கைநதியின் புனிதத்தை காக்கவும்,கும்ப் [கங்கையில்]என்ற
இடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் நடைபெற்று வரும்
சுரங்கப்பணிகள் தடைசெய்யப் படவேண்டும் என்றும்,உண்ணாவிரதம் இருந்து ,உயிர் துறந்தார் சுவாமி நிகமானந்தா. சுவாமி நிகமானந்தா கங்கைக்காக உயிரை விட்டார்.. இவரின் போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.இந்தியர்களின் மனங்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..ரசாயன கழிவுகள்,மற்றும் சாக்கடைகளிலிருந்து கங்கையை காப்பதற்காகவும்,நம் எதிர்கால் சந்ததியினருக்கு புனிதமான கங்கையை விட்டுச்செல்லவும்,நாளைய தலைமுறையினருக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் நாம் அனைவரும் நம் ஊரில் உள்ள ஒரு நீர்நிலையையாவது மாசுபடுவதில் இருந்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.இது தான் நிகமானந்தாவுக்கு நாம் செய்யக் கூடிய அஞ்சலி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெளத்திக் - (புண்ய பூமி பாரதம்)
--------------
பாலர் சர்ச்சா - (புண்ய பூமி பாரதம்)
-----------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தருண சர்ச்சா - சுற்றுச்சூழல் பாதிப்பு - இயற்கை மற்றும் வழிபாட்டு
வகைகளால் கட்டுப்படுத்தலாம்
இயற்கையை போக வாழ்க்கைக்காக முழுமையாக பயன்படுத்துவது மேலை நாடுகளின் வாழ்வியல்முறை. (Exploitation) இயற்கையை மனித குல மேம்ப்பாட்டுக்காகவும் ஆன்மிக முன்னேற்றத்திற்க்காகவும் அளவோடு முறையாகப் பயன்படுத்துவது பாரதத்தின் வாழ்வியல்முறை. (Yogam)
சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகரில் சொற்ப்பொழிவாற்றும் போது
வெளிநாடுகளில் மனிதனின் மரணத்தைக் குறித்து 'Ghost has left his body'
அவரை விட்டு ஆவி பிரிந்துவிட்டது என்பார்கள் , என்றும் பாரத நாட்டில் '
Soul has left the body' ஜீவன் உடலைவிட்டுப் பிரிந்துவிட்டது என்பார்கள்
என்றும் கூறினார். அதாவது மனிதனை ஆன்மாவாகப் பார்க்கும் கலாசாரம்
இயற்கையை முறையாகப் பயன்படுத்தும் என்பதும் மனிதனை வெறும் அழியும்
உடலாகப் பார்க்கும் போக்கு போகவாழ்வை மையமாக வைத்து நுகர்வோர் அல்லது இயற்கையைச் சுரண்டும் போக்காக வடிவெடுத்துவிடும் என்பதும் இதன் பொருள்.
இதன் உதாரணங்கள் பாரதத்தில் ஆயுதம் கூட காக்கும்பொருளாக அதனால் வழிபடும் பொருளாக மாறிவிட்டது.ஆயுத பூஜை என்பது விசேஷ பூஜையாக மாறிவிட்டது.அதனால் பாரதம் பலம் மிகுந்திருந்த காலங்களிலும் என்றும் பிற நாடுகளைச் சுரண்டும் ஆக்கிரமிக்கும் தன்மையைக்கொண்டிருக்கவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்ததால் மறுகன்னத்தைக் காட்டு என்று வாயளவில் பேசும் மேலை நாடுகளும் ,அமைதி மார்க்கம் என்று தங்களை விளம்பரம் செய்யும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் என்றும் உலகப்போர் மற்றும் பயங்கர வாதம் இவற்றையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
பாலிதீன பொருள்கள் இயல்பாக அழியாத தன்மை (not bio degradable) இல்லாதவை. காகிதங்களை அதிகம் பயன்படுத்துவதனால் காடுவளம் அழிகிறது. இதற்கு மாறாக வாழை இலை ,பாக்கு மரத்தட்டுகள் என்று பாரதம் இயற்கையாகக் கண்டுபிடித்த விஷயங்கள் இந்த அழிவிலிருந்து மனிதன் மீள வகை செய்கின்றன.
திருமணத்தை அறமாகக் கடைப்பிடிக்கும் போக்கினால், அதாவது அறம் பொருள்
இன்பம் வீடு என்ற வாழ்க்கை முறையினால் குடும்ப வாழ்வு செழிக்கிறது. ஆனல்
அதை வெறும் ஒப்பந்தமாகப் பார்க்கும் அந்நிய வாழ்வியல் போக்குகளால் அதாவது பொருளும் இன்பமும் மட்டும் என்ற முறையினால் சுயநலம் பெருகி விவாக ரத்து போன்ற இழிவுகள் நிகழ்கின்றன.
அனைத்தும் இறைவன் வடிவம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையினால் பெண்களைத் தாயாகப் பார்க்கும் பண்பு பொலிகிறது. இல்லையேல் விலங்குத்தன்மைதான் வருகிறது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் - வள்ளலார். புல்லின்
மீது பிறர் நடக்கும்போது தன் நெஞ்சின் மீது நடப்பதுபோல் உணர்ந்தார் ஸ்ரீ
ராமகிருஷ்ணர். ஆனால் மனிதனை விலங்காகக் காட்டும் டார்வினின் கொள்கைகளை அதாவது 'இருப்பிற்கான போட்டி' (Struggle for existence) மற்றும்
'பொருத்தமானவர்க்கே வாழ்வு' (Survival for the fittest) என்பவை மனிதனை
ஒருவரை ஒருவர் அழிக்க முயலும் சுயநல வாழ்வை நியாயப் படுத்துகிறது.
மனிதன்- இயற்கை, மனிதன்- தாவரம் மற்றும் விலங்குகள், மனிதன் - மனிதன்
இவற்றில் ஒன்றை ஒன்றினால் ஏற்ப்படும் பாதிப்புகளை நீக்க இயற்கையை
வளப்படுத்தி இயற்கையினால் வளம் அடையும் பாரதத்தின் வாழ்வே சுற்றுச்சூழல்
வளத்திற்கு ஏற்றது
(பின் குறிப்பு : தருணர் மேலும் பல உதாரணங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்)