Friday, May 31, 2024

 Chatrrapathi Shivaji - https://periyakathai.blogspot.com/2023/01/1618.html

Writer "James Grant Duff" - "Maratha History" - British took India from Hindus/Allies of Hindus (except Bengal and Hyderabad)

1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் ஹிந்துக்களின் காவலனான விஜயநகரப் பேரரசும் பலவீனமாகிப் போனது

1630 -பிப்ரவரி 19, v-Shivaji birth

1636ம் ஆண்டு ஜீஜாபாய், சிவாஜி மற்றும் குரு தாதாஜி கொண்டதேவுடன் பூனாவுக்குச் சென்று தங்கினார்

1642ம் ஆண்டு ஒரு நாள் அதே மலைப் பகுதியில் ராய்ரேஷ்வர் கோவிலில் ஒரு சிறிய படை 

16வது வயதில், 1643-ஆம் ஆண்டில் முதலாவதாக,தோரணக் கோட்டை (Torna Fort) 

அப்ஸல்கான் (துல்ஜா பவானி ஆலயத்தை அழித்ததையும்)

1659 நவம்பர் 10ம் தேதி அப்ஸல்கான்  death

British-Navy building

1663 ஏப்ரல் 5 -செயிஸ்டகானை கை விரல்கள் துண்டிக்கப் பட்டு 

மாடுகளின் கொம்புகளில் தீப்பந்தம் 

மிர்ஜா ராஜா ஜெய்சிங் 

ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம் 

1665 ஜுன் 12, -ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார்

1666 மார்ச் 5,  அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்கினார் 

1674 ஜூன் 6, சத்ரபதியாக முடிசூடிய சிவாஜி

எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார்

மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது

1676ல் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சத்ரபதி சிவாஜியால்  கைப்பற்ற பட்டன

1680 ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்

சத்ரபதி சிவாஜி வழியில் அமெரிக்காவை வென்ற வியட்நாம்

கொரில்லா தாக்குதல் 

வியட்நாமில் ஹோசிமின் - அமெரிக்க ராணுவம் 

1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.

வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். 

Wednesday, January 11, 2023

வ.உ.சிதம்பரனார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

             இந்தியாவில்

            உண்மையான

             தியாகி யார் ?

   வ.உ.சிதம்பரனார் தான்


         அந்த தியாகிக்கு

         முதலில் துரோகம்

             செய்தது யார் ?

              இரண்டாவது 

துரோகம் செய்தது யார் ?

         இதை முழுவதும்

       படித்துப் பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்
பிள்ளை மட்டுமே.

அதிலும் கோ|வை சிறைதான், வ.உ.சிக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. .அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. 

இதுதான் வ.உ.சிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை  தடுத்துள்ளார்..

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! 

இதைவிட கொடுமை,
====================

தன்னுடைய வக்கீல் 
===================
உரிமத்தை மீட்டெடுக்க 
=====================
கோர்ட்டில் வாதாடி உதவ 
=======================
வேண்டும் என்று வஉசி
======================
கேட்டதற்கு,   
============ 

மூத்த வக்கீலான 
=================
மூதறிஞர் ராஜாஜி 
=================
மறுத்துவிட்டாராம்.
==================

இவர் தான் வ.உ.சிக்கு
துரோகம் செய்த 
முதல் இந்தியர், தமிழர்

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு,     
                      
தென் ஆப்பிரிக்காவில் 
======================
உள்ள தமிழர்கள்,  5000 
======================
ரூபாய் நிதி திரட்டி 
=================

காந்தியிடம்
=============
 தந்திருக்கிறார்கள்.. 
===================
"எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்த பணத்தை 
=======================
காந்தி, வஉசிக்கு தரவே 
=======================
இல்லையாம்.. "           
=====================

இதனால் தான் இந்தியர்கள் திரும்ப வராத கடனை 
காந்தி கணக்கு என்று நாம் சொல்கிறோம்.


 (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியையோ, போர்க்குணமுள்ள நல்ல தலைவனான அவருக்கு
 சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பதும் கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே  வஉசிக்குதான் உண்டு..!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி..
இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், முழுவதையும் கூறுங்கள்.

திருப்பூர்குமரன்

Thirupur Kumaran 

 #திருப்பூர்குமரன் பலிதானதினம் (11.01.1932). 

1. சுதந்திர போராட்டத்தின்போது காந்தியடிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, 1932-ம் ஆண்டு ஜனவரி 11- ம் தேதி, திருப்பூரில் நடைபெற்ற ஊர்வலத்தில், பிரிட்டிஷ் காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டபோதும், தேசியக் கொடியை கீழே விட்டுவிடாமல், அடி தாங்கி கொடி காத்த தீரனாய் 28 வயதில் அமரரானவர்.

2. இயற்பெயர் குமாரசாமி. 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.  தந்தை நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி. 

3. சுதந்திர போராட்டத்திற்குப் பெயர் கொடுத்தார் குமரன். தலைமை ஏற்க வேண்டிய செல்வந்தர் ஈஸ்வரமூர்த்தியைப் பெற்றோரும் உற்றாரும் தடுத்துவிட்டனர். 9 தொண்டர்களை மங்களவிலாசுக்கு அழைத்து வந்த பி.ஏ. சுந்தரம் நிலையைப் புரிந்துகொண்டார். தொண்டர்கள் சுந்தரத்தை தலைமை ஏற்கச் சொன்னார்கள்.

4. ஒன்பது பேரையும் அணிவகுத்து நிறுத்தினார் சுந்தரம். கையில் கதர்க்கொடி பிடித்து காந்தி மகானை மனதில் நிறுத்தி பாரததேவியின் கோவிலுக்குப் புறப்படும் பக்தனைப் போல் வீறுநடை போட்டார் குமரன்.

5. 'வந்தேமாதரம்' என்ற முழக்கம் வானை எட்டியது. ஊரார் திரண்டு வாழ்த்து கூறினர். காவல் நிலையம் வந்தது. முப்பது காவலர்களும் இரண்டு அதிகாரிகளும் பாய்ந்து வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் மகமது. அவரே காவல்படைக்கு அங்கு தலைவர். தேசபக்தர்களைத் தேடிப்பிடித்து உதைப்பது அவருக்கு உகந்த செயல்.

6. மகமதுவும் மற்ற காவலர்களும் வெறி கொண்டு, தடியால் தாக்கினர். குமரனின் இடது காதுக்கு மேலே விழுந்த அடியில் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டது. 

7. 'வந்தேமாதரம்! வந்தேமாதரம்!'' என்று சொன்ன குமரனின் வாய் ரத்தத்தால் நிறைந்தது. உயர்த்திப் பிடித்த கொடியோடு தரையில் வீழ்ந்தார். தாய்நாட்டுத் துரோகிகளாகிய காவலர்கள் கொடியைப் பிடுங்க முயன்றனர். ''கொடியைப் போடுடா'' என்று கூறிக்கொண்டே தாக்கிய கொடியவர்களின் அடியையும் தாங்கிக் கொண்டு கொடி அவர்கள் கையில் போகாவண்ணம் இறுக்கிப் பிடித்தார், குமரன். ஆத்திரமுற்ற கயமைக் காவலன் ஒருவன் குத்திட்டு நின்ற மண்டை ஓட்டின் மீது ஓங்கி அடித்தான். அடியால் அழுத்தப்பட்ட அந்த ஓடு, மூளையில் பாய்ந்து, செயலிழந்தது மூளை.

8. மண்ணில் வீழ்ந்தான் மாவீரன். கொடியவர் கூட்டமோ குமரனின் உடலை மிதித்தது. கொடியை மிதித்தது. ரத்தச் சேற்றில் அந்தக் கொடி அழுந்திக் கிடந்தது.

9. 1932 ஜனவரி மாதம் 11-ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது.  ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது குமரன் தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.

#tiruppurkumaran #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

Monday, December 26, 2022

பாரதியார் - Bharathiyar

Bharathiyar - பாரதியார்

11 டிசம்பர் 1885இல் பிறந்தார் எட்டயபுரத்தில் பிறந்தார் 
ஏழாம் வயதிலேயே பாடல் இயற்றினார் 
பதினோராம் வயதில் எட்டயபுர மன்னர் பாடலை கேட்டு இதற்கு பாரதி என்று பட்டம் சூட்டினார் அன்று முதல் இவர் சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார் 
நெல்லை ஹிந்து கல்லூரியில் படித்தார் 15 ஜூன் 1897 அன்று அவருக்கு செல்லம்மாளுடன் திருமணம் ஆகியது 
காசி அலகாபாத் உட்பட பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும் கற்றுத் தேர்ந்தார் 
எட்டயபுர அரச கவிஞராகவும் சில காலம் இருந்திருக்கிறார் 
சுதேசமித்திரன் எங்கு இந்தியா போன்ற பத்திரிகைகளை ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார 
1905 தாதா பாபு நாகராஜ் சந்திக்க கல்கத்தா சென்ற பொழுது சகோதரி நிவேதிதாவை சந்தித்தார் அந்த சந்திப்பிற்கு பின்னர் சகோதரியை நிவேதிகாவை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார்
இவர் பாடிய பாடல்களால் தேச பக்தி கடல் நாடெங்கும் பற்றி எரிந்தது அதனால் இவர் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார் 
சிறையில் இருந்து வெளிவந்த போதும் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் போன்ற நூல்களை எழுதினார் 
1912 இல் பகவத் கீதையை தமிழாக்கம் செய்திருக்கிறார்
1918 இல் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள பாண்டிச்சேரி இருந்து வெளியே வாழ்ந்த பொழுது பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார்
தனக்கு கிடைத்த சிறிதளவு உறவை கூட காக்கை குருவிகளுக்கு கொடுத்துவிட்டு தான் பசியோடு இருப்பார்
தன்னுடைய நண்பன் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒரு தடவை வீட்டிற்கு வரும்பொழுது தனக்கு உணவில்லை என்று கேட்டபோது இவர் கொதித்து எழுந்து பாடிய பாடல் தான்
ஒருமுறை ராஜாஜியை சந்திக்க சென்ற பொழுது அங்கே காந்திஜியையும் சந்தித்தார் செப்டம்பர் 11 1921 39 வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார் 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி தான் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடினார் 
சாதி இல்லைடி பாப்பா குல தாய்க்கு முயற்சி சொல்லல் பாவம் 
வந்தே மாதரம் என்றும் மாநிலத் தாயை வணங்குதல் என்போம்
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடியிருக்கிறார்
சிந்துநதி மீது போன்ற பாடல் ஆலயம் செய்வோம் கல்வி சாலைகள் செய்வோம், பள்ளி தலைமைத்துவம் கோயில் செய்கிறோம் போன்ற பாடல் வரிகளால் உத்வேகம் ஏற்படுத்தினார்
காக்கை குருவி எங்கள் ஜாதி 
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார்
மகளிரைப் பற்றி பாரதியார் பாடியது - பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடக்க வந்தோம் 
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
தேடிச் சோறு தினம் தின்று போன்ற பாடல்களை பாடி இருக்கிறார்

சுப்பிரமணிய சிவா - Subramaniya Siva

சுப்பிரமணிய சிவா வத்தலகுண்டில் நாலு அக்டோபர் 1884 இல் பிறந்தார்
தூத்துக்குடியில் காவல் நிலைய உதவியாளராகவும் வேலை செய்தார் 
வ உ சி யின் நெருங்க நெருங்கிய நண்பர் 

மிக சிறந்த பேச்சாற்றல் உடையவர் 
அதிகமாக பாரதியார் பாடல்களை வெளிக்கொண்டு வந்தார்
தேசிய மும்மூர்த்திகள் (சிதம்பரனார் சுப்பிரமணிய சிவா சுப்பிரமணிய பாரதியார்) என்று இவர்களை அழைப்பர் 
ரெட்டை குழல் துப்பாக்கி என்று வ உ சிதம்பரனாரையும் சுப்பிரமணிய சிவாவின் அழைப்பர் 

1904-1905 சமயத்தில் Russia ஜப்பான் போரில் ஜப்பான் வெற்றி பெற்றதை அடுத்து பாரதநாடும் British விடுதலை பெற முடியும் என்ற உத்வேகத்தினால் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்
1906-ல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாவது பிளந்ததால் மக்கள் கொந்தளிப்பை மையப்படுத்தி சுதேசி மற்றும் விடுதலை வேக்கையை நாடறிங்கிலும் பயணம் செய்து மக்களிடம் உத்வேகப்படுத்தினார்
வ உ சி யும் அதே நேரத்தில் சுதேசி கப்பலை நிறுவினார்
பல தொழிலாளர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார்
ஒருமுறை ஒரு போராட்டத்தில் ஒரு பேச்சாளர், பிரிட்டிஷார் மூட்டை முடிச்சுகளுடன் இந்த நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்று கேட்க, இவரோ நாட்டை விட்டு அல்ல மூட்டை முடிச்சுகள் இங்கே விட்டு விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்
நெல்லை மாவட்டத்தில் இவர் செய்த போராட்டங்களினால் இவருக்கு வாய் போட்டு சட்டம் போடப்பட்டது
பிரபஞ்சமித்திரன் ஞானபிந்து ஆகிய பத்திரிகைகளை நடத்தினார்
அதன் மூலமாக சுதந்திர வேட்கை உருவாக்கினார்
கூட்டம் சேரும் இடம் எல்லாம் இவர் இருந்து சுதந்திர வேட்கையை ஏற்படுத்துவார் தனியாக கூட்டம் எதுவும் சேர்க்க மாட்டார்

1921 ஆம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் சிறையில் இருந்தார் தொழுநோயாளி ஆனார்
10 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்க அதை போராடி ஆறும் ஆறாண்டுகளாக மாற்றினார்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் ஆட்டு தோல் பதனிடும் வேலை செய்ததால் தொழுநோயால் பாதிக்கப்பட்டார் 
தொழு நோயால் பாதிக்கப்பட்டதால் பஸ் ட்ரெயின் போன்றவற்றை அனுமதிக்க பிரிட்டிஷாரால் மறுக்கப்பட்டது 
அதனால் இப்படியே தொழு நோயுடன் சிறையில் இருந்தால் நம் நாம் இறந்து விடுவோம் என்று தெரிந்து கொண்டு, தொழுநோய் உடன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு நாடு முழுவதும் சுற்றி அதனால் சென்னை மாகாண முழுவதும் நடந்தோ மாட்டு வண்டியில் பயணம் செய்தோ தேசப்பற்றை வளர்த்தார்
ஒரு சன்னியாசியை போல் தன்னை மாற்றிக்கொண்டு பிரசங்கம் செய்வார் தேச பக்தி கனலை ஏற்படுத்துவார்

பாப்பாரப்பட்டியில் 7 ஏக்கர் நிலத்தில் பாரத் பாரதமாதாவிற்காக கோயில் கட்டினார் 
பூஜாரியாக யாரும் நியமிக்காமல் பொதுமக்களே பூஜை செய்யும் ஏற்பாடு செய்தார்
அனைத்து மதத்தினரும் வந்து வணங்கும் வண்ணம் கோயில் இருக்கும் 

ஒருமுறை பரமாச்சாரியாரை சந்திக்கும் பொழுது தனக்கு தொழுநோய் இருப்பதால் பரமாச்சாரியாரிடம் நேரடியாக செல்ல தயங்கியதால் பரமாச்சாரியார் கூட்டம் கலைந்த உடனே சிவாவை அழைத்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு பாரதம் நாடு விரைவாக சுதந்திரம் அடைய வேண்டும் என்று பிராத்தித்தார்

1925 இல் தன்னுடைய 41 வது வயதில் இறைவனடி சேர்ந்தார் 

வ உ சிதம்பரனார் விடுதலையாகி வெளியே வரும் பொழுது அவரை வரவேற்க இவர் சென்றார்
ஆனால் வ.உசியாலா இவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை
வ உ சிதம்பரனாரால் கட்டித் தழுவிக் கொண்டே வரை இது பாரத மாதாவே உனக்கு போட்டு அணிகலன்கள் என்று பெருமைப்பட்டுக் கொள் என்று கூறினார்

Saturday, June 11, 2022

மராட்டா தாராபாய்


ஜெய் பவானி ✊
வீர சிவாஜி 🚩


சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த  சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்..

அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு உணவாகப் போடப்பட்டார்..!

அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார்..!

அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத்தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  ராஜ்யம்..!

டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர். .!

தங்களுக்கு சகாயம் செய்ததாக சிறப்பு துதிகள் செய்தனர்.  அரசவைக் கவிஞர்கள்  அரசர்களை புகழ்ந்து கவிதை பாடி சிறப்பு பரிசுகளை அள்ளினர்..!

ராஜாராம் இறந்த மூன்றாவது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர்...!

சத்ரபதி சிவாஜி மகராஜ் தனது வீரத்தாலும் மதியூகத்தாலும் ஸ்தாபித்த ஹிந்து ராஜ்யம் விகிர்த்துப்போய் நின்றது..!

அப்படி சரணடைய நேர்ந்தால் அத்தனை  கோவில்களும் இடிக்கப்படும். அர்ச்சாவதார திருமேனிகள் அனைத்தும் உடைக்கப்படும்..!

ஹிந்துக்கள் மீண்டும் படுகொலை செய்யப்படுவார்கள்.  பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக பிடித்து சென்று விற்பனை செய்யப்படுவார்கள்.  சமூகம் மீண்டும் கொலைகார முகலாயருக்கு முழு அளவில் அடிமைப்பட
வேண்டியிருக்குமென நெஞ்சம் பதைத்து நின்றனர் ஹிந்துக்கள். .!

ராஜாராம் இறந்து ஆறாவது நாளில் அனைத்து காரியமும் நடைபெற வேண்டுமெனவும் ஏழாவது நாள் அரசவை கூடி புதிய ராஜாவை அரியணையில் அமர்த்த  வேண்டும் எனவும் 19 வயதில் கைம்பெண்ணான ராஜாராமின் மனைவி தாராபாய் வேண்டுகோள் கலந்த ஆணை விடுத்தார்..!

அவர் சுல்தான்களுக்கு பயந்து போய் ஈம  காரியங்களை சீக்கிரம் முடித்துவிட்டு தனது பத்து மாத குழந்தையுடன் தப்பியோட உத்தேசித்திருப்பதாக பலரும் நினைத்தார்கள்..!

இந்த தகவல்கள் உளவாளிகள் மூலம் சுல்தான்களுக்கு கிடைத்தது. சுல்தான்கள் சிவாஜி மகாராஜ் அரும்பாடுபட்டு ஸ்தாபித்த  சாம்ராஜ்யத்தின் கதியை எண்ணி எக்காளமிட்டனர்..!

அப்போது குறுகிய எல்லைக்குள் தங்கள் சிற்றரசுகளை நிறுவிக்கொண்டு கண்ணில் பட்ட ஹிந்துக்களை ஜிஸியா வரி வசூலித்து சாறாகப்பிழிந்தும் அவ்வப்போது ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்து விற்றும் சுக ஜீவனம் செய்து வந்த சில முகலாய  ராஜாக்கள் மராட்டாக்களோடு கூட்டணி வைக்க தூது அனுப்பினார்கள்.  சில மராட்டா  தலைவர்கள் அச்சத்தில் அந்த முகலாயர்களின் ஆதரவை ஏற்பது சரியென்றனர்..!

ஏழாவது நாள் ராஜ சபை கூடியது பிரதான மந்திரி தலைமையில் ராஜ்யத்திற்கு பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என அறிவிக்கப்பட்டது. முகலாய கொடூரங்களை நேரில் அனுபவித்திருந்த  தலைகள் கவிழ்ந்தன...!

முன்பே சொன்னது போல  கிட்டத்தட்ட முக்கால்வாசி படைத்தலைவர்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜா காலத்து மனிதர்கள். வீரத்தில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் வயது அவர்களை பலவீனப்படுத்தியிருந்தது. 

மீதமிருந்த கால்வாசி படைத்தலைவர்கள் போதிய அனுபவமற்ற இளைய வீரர்கள்...!

பிரதான மந்திரி சிவ்நாத் ராவ் மோஹித்ஜி  நிலைமையை எதிர்கொள்ள சபையோரின் ஆலோசனையை வேண்டினார். முக்கால்வாசிப்பேர் பீஜப்பூருடன் சமாதானமாப்போகலாம் என்றனர். பலர் அவுரங்கசீப்புக்கு தூது அனுப்பலாம் என்றனர்..!

ஆக மொத்தத்தில் எல்லாம் முன்னைவிட குழப்பமாக இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு மஹாராஜ் ராஜாராம் மனைவி ராணி தாராபாய் அரசவைக்கு வருவதாக முன்னறிவிக்கப்பட்டது. ..!

அரசவையில் ஒரு விதமான அமைதி நிலவியது.  தாராபாயும் தாதிகள் புடைசூள வந்தார். அவரைப்பார்த்த அரசவை அதிர்ந்தது..!

விதைவைக்கான எந்த அறிகுறியும் இன்றி சர்வ அலங்கார பூஜிதையாக பட்டாடை அணிந்து தங்க வைர ஆபரணகள் சூடி, உடை வாளுடன் நிமிர்ந்த நடையுடன் அரசவையை ஊடுருவும் பார்வையுடன் கம்பீரமாக வந்து அரியணையில் அமர்ந்தார்..!

அவையோரின் ஆலோசனை முடிவு என்னவென தலைமை அமைச்சரை கேட்டார். ராணி தாராபாய் ஒரு கைம்பெண்ணுக்கான விதிகளை மீறி பரிபூரண ஆடை அலங்காரத்துடன் அரசவைக்கு வந்ததுமல்லாமல் தான் ஒரு விதவை என்பதையும் மறந்து அரியணையில் அமர்ந்ததை பார்த்ததால் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர் இன்னும் தெளிவு பிறக்கவில்லை என கூறினார்..!

அனைவரது நடவடிக்கையிலும் இவர் 19 வந்து சிறு  பெண்தானே என்கிற அலட்சியம் இருந்தது. ஆனால் ராணியின் தீர்க்கமான முகம் அவர்களுக்கு ஒருவித தயக்கத்தை கொடுத்தது..!

கம்பீரமாக எழுந்து நின்ற ராணி சைகை காட்ட ஒரு தாதி ராணியின் பத்து மாத குழந்தையை கொண்டு வந்து ராணியிடம் கொடுத்தாள். அந்த குழந்தையை "ராஜாவாக" அறிவித்த ராணி, ராஜ்ஜியத்தையும் ராணுவத்தையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தார்..!

குழப்பமான ராஜ சபையில் சிலர் முனக ஆரம்பித்தனர். ராணி புருவத்தை உயர்த்த அவர்களோடு சமாதானம் இவர்களோடு சமாதானம் என ஆளாளுக்கு இழுத்தனர்..!

ராணி அவர்களை ஒருவித பரிதாபத்துடன் பார்த்துவிட்டு சமாதானத்திற்கு முயன்ற சம்பாஜி ராஜாவின் கதியை நினைவு படுத்தி சமாதன முயற்சிகளை புறக்கணித்தார்..!

ஒரு வயதான தளபதி எழுந்து முகலாய குறுநில மன்னர்கள் சமாதானம் வேண்டி தூது அனுப்பியுள்ளதை நினைவுபடுத்தினார்..!

நிமிர்ந்து பார்த்த ராணி நமது ஆட்களுக்கு முதல் பலி அவர்கள் தான் என்று கூற அரசவை மீண்டும் அதிர்ந்தது. அவர்கள் குறுகிய பகுதிகளை ஆண்டாலும் அவர்கள் இடத்தில் போய் அவர்களை தாக்குவது புவியல் ரீதியாக ஆபத்து என சில படைத்தலைவர்கள்  கூறினர். பலரும் அதை ஆமோதித்தனர்..!

அவையோரின் தடுமாற்றங்கள் எதையும் பொருட்படுத்தாமல் ராணி பிறப்பித்த அடுத்த உத்தரவு அவர்களை சிலையாக்கியது..!

இன்னும் மூன்று நாழிகையில் படைகள் நகரும் என்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார்..!

அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து பாய்ந்தோடிய மராட்டா குதிரைப்படை யாரும் எதிர்பாரதா நேரத்தில் அந்த குறுநில படைகள் மீது பாய்ந்தது. என்ன நடக்கிறது என அவர்கள் அனுமானிக்கும் முன் வெட்டிச்சாய்க்கப்பட்டனர்..!

ராணுவ கூடங்கள் மீது நெருப்பு அம்புகள் வீசப்பட்டு பற்றி எரிந்தன. மிகக்கேவலமாக மிருகங்களைப்போல் வாயில் புல்லைக் கடித்துக்கொண்டு சரணடைந்த இஸ்லாமியர்கள் வெட்டித்தள்ளப்பட்டனர். .!

மராட்டா படை முழு வெற்றியுடன் ராஜ கைதிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு அனைவரையும் வெட்டித்தள்ளியது..!

ராணி தாராபாய் கடந்த காலத்தில் ஹிந்து மன்னர்கள் நடத்திய தர்மயுத்தம் என்கிற முட்டாள்தனத்தையெல்லாம் செய்துகொண்டிருக்கவில்லை..!

எதிரிகளை எதிரிகளாகவே பார்க்கும் நல்லறிவுடன் சாகச யுத்தங்களை நடத்தினார்.  எதிரிகள் மீது கொடூரத் தாக்குதல்களை தொடுத்தார்.  ராணியின் குதிரைப் படைகள் பாய்ந்தோடிய இடங்களிலெல்லாம் எதிரிகளின் ரத்த ஆறு  ஓடியது..!

அடுத்து மாராட்டா ராஜ்ஜியத்தில்  ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி கலகம் விளைவித்த  கல்யாண்பிவாண்டி கோட்டை தலைவன் பாஜிராவ் கோர்பதே என்கிற  துரோகியை தண்டிக்க  கல்யாண் பிவாண்டி கோட்டை மீது பாய்ந்தது ராணியின் படை..!

பல சாகசங்களை கையாண்டு முகலாயர்களாலேயே தகர்க்க இயலாத கோட்டை கதவை பெயர்த்து துரோகிகளை கொன்றொழித்து ருத்தர தாண்டவமாடினார் ராணி தாராபாய்..!

அதுவரை அவரை இளகாரமாக பார்த்த படைத்தலைவர்கள் அச்சத்துடனும் மரியாதையுடனும் அவரை பார்த்தனர்..!

இந்த ராணி தாராபாய் – சிவாஜி மஹாராஜரது மாவீரப் படைத்தலைவர்களில் ஒருவரான ஹம்பிராவ் மோஹித் என்பவரது தவப் புதல்வி ஆவார்..!

தாராபாய் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது அவரது தாய் பீஜப்பூர் படை தாக்குதலில் இறந்து போனார்.
உடன் பிறந்தவர்கள் இல்லாத அவர் சிறு வயது முதல் தனது தந்தையுடன் படை முகாம்களில் வளர்ந்தவர். ..!

எட்டு வயதிலேயே எந்த குதிரை மீதும் பாய்ந்து ஏறி சவாரி செய்யத் திறமை பெற்றார்.  பத்து வயதில் வில் வித்தையில் தேர்ச்சிபெற்றார். பன்னிரண்டு வயதில் வாட் சண்டை பயில ஆரம்பித்து சில ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றார்..!

துப்பாக்கி சுடுவதிலும் நன்கு தேர்ச்சியடைந்தார். உரிய வயதில் பெரியோர் விருப்பப்படி இளவரசர் ராஜாராமுக்கு மணமுடிக்கப்பட்டு இல்வாழ்க்கையை நடத்தி வந்தவர் தனது கணவரது அகால மரணத்தால் பெரிய பொறுப்புகளை மிகச்சிறிய வயதில் துணிந்து ஏற்றுகொள்ள
வேண்டியவரானார்..!

அதன் பிறகு ராணியின் படைகள் தொடர்ந்து நான்கு திசைகளிலும் எதிரிகள் மீது பாய்ந்தது. ஏளனமாக சிரித்த சுல்தான்கள் இறைவன் ஏன் இப்படி ஒரு பொட்டை சைத்தானை படைத்தான் என அறிஞர்களுடன் ஆராய்ச்சி செய்தனர்..!

ராணியை கைது செய்து தனது அந்தப்புரத்தில் சேர்க்கும் நோக்கத்துடன் சுல்தான்களால் அனுப்பபட்ட படைகள் எல்லாம் மராட்டாக்களின் வாளுக்கு இரையாகின..!

மராட்டா ராணுவத்தில் துரோகம் செய்ய நினைப்பவன் யாரும் கிடையாது. ராணுவத்தினர் சிறு தவறு செய்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.  தீரச்செயல் செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். கைகால்களை இழந்த வீரர்களுக்கு சகல வசதியும் செய்துகொடுக்கப்பட்டது..!

ராணி தாராபாய் இறுதிவரை தனக்கென எந்த சிறப்பு சலுகை அல்லது வசதி செய்து கொள்ளவில்லை.  ராணுவ உடை அணிந்து ஆயுதங்கள் பூண்டு எப்பொழுதும் போர்க் கோலத்திலேயே இருந்தார். 
மற்ற ராணுவ வீரர்கள் உண்ணும் உணவையே உண்டார். உறங்குவதற்கு தனி கூடாரம் கூட வைத்துக்கொள்ளாமல் மற்ற ராணுவ வீரர்களைபோலவே மைதானத்தில் உறங்கினார்..!

தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத  இளம் தாயான அவர் தனது மார்பில் சுரக்கும் தாய்ப்பாலை பீய்ச்சி மருத்துவ பயன்பாட்டுக்காக மருத்துவர்களிடம் கொடுப்பாராம்..!

அடிபட்டுகிடக்கும் ராணுவ வீரர்களை ஒருநாளும் அனாதையாக விடமாட்டாராம். மிகவும் மோசமாக காயம்பட்டு உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ராணுவ வீரர்களை கண்டால் அவர்களது தலையை உயிர் பிரியும்வரை தனது மடியில் வைத்து அணைத்துக் கொள்வாராம்..!

கண்டிப்பும் கருணையும்  ஒருங்கே படைத்த ராணியை தங்களது தாயாகவே ராணுவ வீரர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். .!

அவரது படையில் சேர்வதே பெரும் பாக்கியம் என கருதிய ஹிந்து இளைஞர்கள் அணியணியாக வந்தனர். படை வளர்ந்து கொண்டே இருந்தது. அதுவரை பல நூற்றாண்டுகள் ஹிந்துக்கள் மீது கொடூரங்களை இழைத்து வந்த முகலாயர்கள் மீது ராணியின் ராணுவம் "ஓயாது "போர்தொடுத்தது.  .!

கோவில்களை கேந்திர முக்கியத்துவம் மிக்க கோட்டைகளை காப்பது போல் காத்தார் ராணி. வேதியர்கள் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு கோவில் காரியங்களும் வைதீக காரியங்களும் செவ்வனே நடக்க ஆவன செய்தார் ராணி..!

வேத பாடசாலைகளுக்கு ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.  மதத்திற்கு விரோதமாக பேசினால் அவனது தலை துண்டிக்கப்பட்டது..!

அப்போது நோய் வாய்ப்பட்டிருந்த பீஜப்பூரின் மன்னன் அடில்ஷாவின் ராணி சாஹிபாபேகம் அசாத்திய திறமையுடன் ஆட்சியை நடத்தி வந்தாள். அவள் தான் சிவாஜி மகாராஜை அழிக்க அப்சல்கான் என்கிற காட்டுமிராண்டியை பெரும்படையுடன் அனுப்பியவள்..!

சிவாஜி மகராஜ் அசாத்திய சாகச திறமையுடன் அவனை எதிர்கொண்டு புலிநகத்தால் அவனது வஞ்சக குடலை உறுவிக் கொன்று அவனது பெறும்படையை சுற்றிவளைத்து கொன்றதால் அவளது திட்டம் பெரும் தோல்வியடைந்து நடுங்கிகொண்டிருந்தாள். .!

ஆனால் மராட்டிய ராஜகுடும்ப நிகழ்வுகள் அவளுக்கு சாதகமாக அமைய மராட்டக்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஆனாலும் நமது ராணி தாராபாயின் எழுச்சி அவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. தந்திர ஓநாயான அவள் ராணி மற்ற சுல்தான்களுடன் போரிட்டு ஓயட்டும் சமயம் பார்த்து சுலபமாக ராணியை தோற்கடிக்கலாம் என பெரும் படையை தயார் செய்து காத்திருந்தாள்..!

ஆனால் நமது மதியூக ராணி பீஜப்பூர் மீது படையெடுக்க ஆவன செய்வது போல நடித்துக்கொண்டே எதிர்பார்க்காத அதி சாகசத்துடன் கொடூரத்துக்கு பெயர்போன கோல்கொண்டா, பாமினி, அஹமத் நகர் சுல்தான்களை திடீரென்று தாக்கி  கூண்டோடு அழித்தார். .!

பீஜப்பூரை தாக்க ராணி அஞ்சுகிறார் என அனைவரும் நினைத்தார்கள். ராணியை தாக்க பீஜப்பூரின் படைகள் அணிதிரள ஆரம்பித்தன.

அப்போது அவுரங்கசீப் கைப்பற்றிய தனது கோட்டைகளை தாக்கி மீட்கப்போவதாக அறிவித்தார். உளவாளிகள் தீவிரமாக மராட்டியத்தின் வடபகுதியில் செயல்பட்டனர்.  அதே போல ராஜ்கர், புரந்தர், கிங்காட் கோட்டைகளிலிருந்த மராட்டா படைகள் வடக்கு நோக்கி நகர்ந்தன.

 ஆனால் அவை பாதியில் குழுக்களாக பிரிந்து மலைகாடுகளில் மறைந்து தெற்கு நோக்கி பயணித்து சந்திரபாக நதிக்கரையில் இன்றைய பண்டரீபுரத்திற்கு அருகில் ஒன்றுகூடி பீஜப்பூர் மீது எமகிங்கரர்களைப் போல பாய்ந்தனர். 

ஜெய் சம்போ மகாதேவ் என்கிற பேரிரைச்சல் விண்ணை முட்டியது..!

 கொடூரங்களுக்கு பெயர்போன ஈவு இரக்கமற்ற பிஜப்பூர் இஸ்லாமிய காட்டுமிராண்டிகளின் படைகள் ஆங்காங்கே சுற்றிவளைக்கப்பட்டு வெட்டிச்சாய்க்கப்பட்டனர்..!

அவர்களது கூச்சல் அவர்களுக்கே கேட்கவில்லை. அதுவரை அப்பாவி ஹிந்துக்களை கொன்றே பழக்கப்பட்ட முகலாயர்கள் மராட்டாக்களின் வாட்களுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் இரையாகினர்..!

பீஜப்பூரின் தொண்ணூறு சதவிகித தாக்குதல் படைகளை அழித்த ராணி ஒரு குறுகிய எல்லைக்குள் ஒடுங்கிய பீஜப்பூரின் தற்காப்பு படைகளை அழிக்க முயன்றால் தனது படைகளுக்கு உயிர் சேதம் அதிகம் ஏற்படும் என்று கருதி நாடு திரும்பினார்..!

அப்போது அவரது ராணுவத்தின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்ந்து முகலாயர்களை குலை நடுங்கவைத்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது இந்திய வரலாறு மிகப்பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகிக்கொண்டிருந்தது..!

கொங்கன் கடற்கரையில் அமைந்திருந்த ராஜபுரி என்கிற நகரத்தில் அமைந்திருந்த வெள்ளையர்களின் வியாபார மற்றும் ஆயுத தொழிற்கூடங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருந்தன..!

பாரத தேசமெங்கும் வெள்ளையர்கள் உலவ ஆரம்பித்திருந்தனர். போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றி ஹிந்துக்களை மதமாற்ற இன்குசிஷன் (Inquisition) என்னும் கொடூர விசாரணை முறைகளால் லட்சக்கணக்கான ஹிந்துக்களை சித்ரவதை செய்து  மதமாற்றி வரும்வதாகவும்  மதமாற மறுத்தவர்களை கொடூரமாக கொலை செய்து வருவதாகவும் ராணிக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன. .!

இவை குறித்து சிந்தித்து முடிவெடுக்க இயலாத வண்ணம் டெல்லி சுல்தான் அவுரங்கசீப்பின் படைகள் ராணிக்கு தொல்லை கொடுத்தன..!

ராணி தனது முழுப்பலத்தையும் திரட்டிக்கொண்டு டெல்லி படைகளை தாக்கினார். அவுரங்கசீப்பின்  முக்கால்வாசி படையினர் மராட்டாக்களுக்கு இரையாகினர். தப்பியோடிய அவுரங்கசீப்பின் படைகளை நர்மதை நதிவரை துரத்தி சென்றார் ராணி தாராபாய்..!

ராணியின் படையிலிருந்த சந்தோஷ்ராவ் தேஷ்முக் என்கிற இளைஞன் படைகளுடன் நர்மதை நதியையும் தாண்டி இஸ்லாமியர்களுக்கு பயம் காட்டிவிட்டு வந்தான். .!

தனது தலைநகர் வரை ஒரு காஃபிர்  ...பெட்டைசாத்தான் ...வந்துவிட்டாளே என்கிற அவமானம் தாங்காமல் அவுரங்கசீப் ஓபியம் என்னும் போதை வஸ்த்துவை அளவுக்கு அதிகமாக தின்றுவிட்டு முடங்கி கிடந்தான்..!

ஹிந்து தாயின் புதல்வர்களே புதல்விகளே பாரதத்தை எண்ணூறு ஆண்டுகள் ஆண்டபோதும் இஸ்லாமியர்களால் ஏன் முழு இஸ்லாமிய நாடாக்க முடியவில்லை என்பது தெரிகிறதா..? 

அன்னிய  மதவெறியர்கள் ஈன ஜென்மங்களின் பொய் பிரச்சாரத்தை நாம் உரிய வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு தர்க்க ரீதியாக எதிர்கொள்ளாவிட்டால் நமது முன்னோர்களின் வீர வரலாறு அடியோடு அழிக்கபடும்..!

ராணி தாராபாயின் வீர வரலாறு தியாக வரலாறான சரித்திரம்..!

ராணி நிலைமைகளை அவதானிக்கும் முன் அவுரங்கசீப் மராட்டக்களை வெல்லவேண்டும் என்கிற தனது ஆசை நிறைவேராமலேயே இறந்து போனான்..!

சிவாஜி மஹராஜ் காலத்து மாவீர தளபதிகளான பாலாஜிராவ், பாஜிராவ், மோஹன்ராவ் பாண்டுரங், டானாஜி ராவ், ஏஷாஜிராவ் தேஷ்முக், சிவ்நாத்ராவ், கங்காநாத் கோர்பதே, டானாஜி ராவின் காதலியும் பெண் சிறுத்தை என்று அழைக்கப் பட்டவருமான பிரபாவதி உள்ளிட்ட பலர் போரிட்டு போரிட்டு  போர்க்களத்தில் வீரசொர்க்கம் அடைந்தும் வயது மூப்பால் செயலிழந்தும் போனதால் மராட்டா ராணுவத்தில் பெரிய  வெற்றிடம் ஏற்பட்டது..!

 ராணிக்கு எதிராக அந்த மூடர்களால் பங்காளிப் பகை வளர்க்கப்பட்டு ராணியின் செயல் பாடுகள் முடக்கப்பட்டது.  ஊண் உறக்கமின்றி போர்க்களங்களை சந்தித்து வந்த ராணிக்கு உள்ளூர் துரோகிகளின் செயல்களை எதிர்கொள்ள இயலாமல் போனது..!

ஆனாலும் ராணி தாராபாய்க்காக  எதையும் செய்ய அவரது படையணிகள் தயாராகவே இருந்தன. ராணி நினைத்திருந்தால் நான்கு நாட்களுக்குள் கலகக்காரர்கள் கொன்று புதைக்கப்பட்டிருப்பார்கள். .!

ஆனால் பங்காளிப்போரால் மராட்டாக்கள் அழிந்துபோவதை விரும்பாத ராணி சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அவர்களின் முதல் ராணி சாயிபாய் வயித்து பேரனான ஷாஹூவிடம் ஆட்சியையும் ராணுவத்தையும் அமைதியாக ஒப்படைத்தார். .!

தனது பத்தொன்பது வயதில் கையிலெடுத்த வாளை முப்பத்தாறு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு 55 வயதில் உறையில் போட்டார் ராணி தாராபாய்...!

 அப்பொழுது தரைமேல் ஒரு இஸ்லாமிய அரசு கூட முழுவதுமாக இல்லாமல் போயிருந்தன.  தனது சாகச யுத்த திறமையாலும் தேர்ந்த மதியாலும் இஸ்லாமியர்களின் எழுநூறு – எட்டுநூறு ஆண்டு கால கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்திருந்தார் ராணி. .!

அவர் தனக்கு ஆதரவு வேண்டி யாரையும் யாசிக்கவில்லை. காத்து கொண்டிருக்கவில்லை. மாறாக கடவுள் மீதும் தர்மத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வீரத்துடன் எதிரிகளை எதிர்த்தார். கொடூரங்களுக்கு பெயர்போன முகலாயர்களை  நாசமாக்கினார்..!

அவரைப்பற்றி விவரிக்கும் ஜாதுநாத் ஜவகர் என்கிற வரலாற்று பேராசிரியர் கீழ்கண்டவாறு ஒப்பிடுகிறார். 

சத்ரபதி சிவாஜி மகராஜ் ஹிந்துக்களை காக்க தனது இறுதி மூச்சுவரை நிம்மதியாக தூங்கியதில்லை..!

ஆனால் ராணி தாராபாய் முகலாயர்களை ஒருநாளும் நிம்மதியாக தூங்கவிட்டதில்லை என்கிறார்..!

இந்த ராணியின் மாவீர வரலாற்றை நமது நேருவின் கைக்கூலி வரலாற்று ஆசிரியர் பெருமக்கள் முற்றும் முழுதாக மறைத்துவிட்டார்கள். 

 மேலும் ஆங்கிலேயர்கள் வந்துதான் இந்தியாவை இஸ்லாமியர்களிடமிருந்து மதமாற்றத்திலிருந்து காப்பற்றியதாக கதை சொல்கிறார்கள். .!

ஆனால் உண்மை என்னவென்றால் ராணி தாராபாய் அத்தனை சுல்தானிய அரசுகளையும் முற்றாக அழித்துவிட்டிருந்தார்..!

 இருந்த சில முகலாயர்களும் ராணிக்கு பணிந்து வாழவேண்டிய சூழல் உருவாகியிருந்தது. இன்னும் ஒரு பத்தே ஆண்டுகள் ராணியின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் ஒட்டு மொத்த முகலாயர்களுக்கும் சமாதி கட்டியிருப்பதுடன் வெள்ளையர்கள் பாரத புண்ணிய பூமியில் காலடி வைக்க இயலாத அளவுக்கு ஒரு மாபெரும்  சாம்ராஜ்யத்தை நிறுவியிருப்பார்..!

இவ்வாறான மாவீரர் வீராங்கனைகள் தங்கள் சுக துக்கங்களை புறந்தள்ளி  அன்னிய மதவெறியர்களுடன் தொடர்ந்து போரிட்டதாலயே சனாதான  தர்மம் இம்மட்டும் பிழைத்திருக்கிறது. .!

அந்த மாவீரப்போராளிகளால் தான்  நமது தாய் மதம் அழிவிலிருந்து காக்கப்பட்டது..!

தாராபாயின் மறைக்கப்பட்ட வரலாற்றை அனைவரும் நினைவில் கொள்வோம்.!

🚩பாரத் மாதா கி ஜெய்✊